வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும்.
வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம்.
இது ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.
வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம். மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும்.
கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்ப மரக் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மிக பயன் உள்ளது.
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ - 2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
புளி, துவரம் பருப்பு - தலா 100 கிராம்,
கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
நோயை உண்டாக்கும் மெழுகு குலையாத பழங்கள் !
செய்முறை:
துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும்.
இதில், கரைத்த புளியை ஊற்றி, கொதிக்க விடவும்.
வேக வைத்த துவரம் பருப்பில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
பொங்கி வரும் போது, பெருங்காயத்தூளைச் சேர்த்து இறக்கவும்.
கடைசியில், பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழையைத் தூவவும்.
சூப்பரான வேப்பம்பூ பருப்பு ரசம் ரெடி.