அருமையான தர்பூசணி ரசம் தயார் செய்வது எப்படி?





அருமையான தர்பூசணி ரசம் தயார் செய்வது எப்படி?

கோடைக்கால வெப்பத்தை தணிக்க பலரும் நாடுவது தண்ணீர் மற்றும் நிழலைதான். தாகத்தை தணிக்க தண்ணீர் அருந்துவது பிரதான வழக்கமாக இருந்தாலும் பழங்கள், பழச்சாறுகளை அதிகமாக அருந்துவதுண்டு. 
அருமையான தர்பூசணி ரசம் தயார் செய்வது எப்படி?
அந்த வரிசையில் தர்பூசணி பழத்திற்குத்தான் முதலிடம். நம் தாகத்தை தணிப்பது மட்டுமன்றி உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதிலும் தர்பூசணி சிறந்தது. 

தண்ணீர் நிறைந்த பழம் தர்பூசணி என்றாலும் அதன் இனிப்பு சுவைக்கும் தர்பூசணி பெயர் போனது. தர்பூசணி ஊட்டச் சத்துக்களின் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக கோடைக் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவுக்கிறது. 
அதோடு இன்னும் பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. தர்பூசணியில் லைகோபீன் மற்றும் சிட்ரூலின் இருப்பதால் இதய செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு அழற்சி பன்புகளையும் கொண்டுள்ளது. 

அதோடு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. தர்பூசணி ஆண்டி ஆக்ஸிடண்டின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இதில் விட்டமின் சி மற்றும் லைகோபீன் உள்ளதால் செல்களின் சேதத்தை தடுக்கிறது. 

இதனால் நாள்பட்ட நோய்களை தவிர்க்கலாம். வயிற்று பிரச்சனைகள், வயிறு தொடர்பான தொந்தரவுகளை அடிக்கடி அனுபவிக்கிறீர்கள் எனில் தர்பூசணி உங்களுக்கு சிறந்த நண்பன். 

இதில் நார்ச்சத்து நிறைவாக இருப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படும். செரிமான செயல்பாடுகளும் துரிதமாக இருக்கும். 

ஏற்கெனவே கூறியது போல் இதில் இருக்கும் நீர்ச்சத்து உடலின் நீரேற்றத்தை பராமரிப்பதால் சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதோடு விட்டமின் சி இருப்பது உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
நோயை உண்டாக்கும் மெழுகு குலையாத பழங்கள் !
தேவையான பொருட்கள்.: 

தர்பூசணி சாறு – ஒரு கப், 

துவரம் பருப்பை வேக வைத்து மசித்து எடுத்த நீர் – அரை கப், 

புளித் தண்ணீர் – சிறிதளவு, 

முழு நெல்லிக்காய் சாறு – 4 டீஸ்பூன், 

மஞ்சள்தூள், மிளகுத்தூள், ரசப்பொடி, உப்பு – சிறிதளவு.

தாளிக்க.: 

நெய் – ஒரு டீஸ்பூன், 

கடுகு, சீரகம் – சிறிதளவு, 

பெருங்காயத்தூள் – சிறிதளவு, 

கொத்தமல்லி – சிறிதளவு, 

கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை.: 
தர்பூசணி ரசம் தயார்
வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… பருப்பு நீர், தர்பூசணி சாறு, நெல்லிச்சாறு, புளித் தண்ணீர் சேர்க்கவும். 
இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், ரசப் பொடி சேர்த்து நுரைத்து வரும் போது… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். இந்த ரசம், இனிப்பு – புளிப்பு சுவையுடன் அட்டகாசமாக இருக்கும்.
Tags: