பிராந்தி சிக்கன் ரெசிபி தயாரிப்பது எப்படி?





பிராந்தி சிக்கன் ரெசிபி தயாரிப்பது எப்படி?

இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு.
பிராந்தி சிக்கன் ரெசிபி தயாரிப்பது
நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?… நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம். 

ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான். 

ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. 

அது மட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது. 

அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிக்கன் ரெசிபியில் வித்தியாசமாக ட்ரை பண்ண ஆசையா? அப்படியானால் பிராந்தி சிக்கன் ரெசிபியை முயற்சி செய்யுங்கள். 

அதெப்படி பிராந்தி கொண்டு சிக்கன் சமைப்பது என்று கேட்கிறீர்களா? உண்மையிலேயே பிராந்தி கொண்டு சிக்கன் செய்தால், சிக்கனின் சுவையானது மிகவும் சூப்பராக இருக்கும்.
குறிப்பா இந்த சிக்கன் ரெசிபியை பேச்சுலர்கள் முயற்சிக்கலாம். அந்த மாதிரி இது மிகவும் ஈஸியாக இருக்கும். இங்கு அந்த பிராந்தி சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (வேக வைத்துக் கொள்ளவும்)

மைதா - 1 1/2 கப்

சிக்கன் பிராத் - 1 கப்

பிராந்தி - 1/4 கப்

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

ஆலிவ் ஆயில் - 4 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

மிளகு - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.

சிக்கனானது பொன்னிறமானதும், அதில் 3/4 கப் சிக்கன் பிராத் ஊற்றி, சிக்கனை அதில் நன்கு வேக வைக்க வேண்டும். 

சிக்கன் பிராத்தானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு, வெண்ணெய், மிளகு மற்றும் உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதில் மைதாவை சேர்த்து, மீதமுள்ள சிக்கன் பிராத் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்த பின்பு, 
பிராந்தியை ஊற்றி, 3 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான பிராந்தி சிக்கன் ரெசிபி ரெடி!
Tags: