கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள மற்ற இறைச்சியை காட்டிலும் மீன் ஒரு பெஸ்ட் உணவு என்பதை மறுக்க முடியாது.. ஆனால், குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மீன்களை தாராளமாக தந்து விடக்கூடாது.
காரணம், மீன்களிலும் நச்சுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. பூமியின் வடிகால் கடல் என்பதால், அனைத்து விதமான கழிவுகளும் கடலில் போய் சேருகின்றன.
எனவே, நச்சுப்பொருட்களும், பாக்டீரியாக்களும், ரசாயனக் கழிவுகளும் கடலில் தான் கலக்கின்றன.. கடல் நீரில் வாழும் மீன்கள் இவைகளை தங்கள் உடலில் சேர்த்து வைக்கின்றன.
அந்த ரசாயன பொருட்கள் நம் உடம்பில் சேரும் போது, புற்றுநோய், குழந்தையின்மை, உள்ளிட்ட சிக்கல்களை தந்து விடும்.
மீன்களை எவ்வளவு பதப்படுத்தினாலும், எவ்வளவு கொதிநீரில் வேக வைத்தாலும், சில விஷப்பொருட்கள் முழுமையாக நீங்குவதில்லை.
அவ்வளவு ஏன்? சில மீன் பண்ணைகளில், வியாபாரத்துக்காக வளர்க்கப்படும் மீன்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப்படுவதாக தெரிகிறது.. அதையும் மீன்களை கவனமாக பார்த்து தான் சாப்பிட வேண்டும்.
எனவே, அதிகம் கழிவுகள் கலக்காத குறிப்பாக பாதரசம் இல்லாத மீன் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதாவது, பாதரசம் நீரில் கலக்கும் போது அது மெத்தில் மெர்குரி என்று பாக்டீரியாவால் மாற்றப்படுகிறது.
நீரில் உள்ள மீன்கள் இந்த மெத்தில் மெர்குரியை உறிஞ்சுகின்றன.. நாம் மீன்களை சமைத்த பிறகும் கூட, மீன்களின் உடலில் பாதரசம் காணப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
மீன் – 1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத மீன்)
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
வெந்தய பொடி – 1 மேஜைக்கரண்டி
பூண்டு – 1
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
வினிகர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை – சிறிது
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும்
அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு பொன் நிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
5 நிமிடம் ஆனதும் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சுவையான மீன் ஊறுகாய் தயார்