அவல் கிச்சடி தயார் செய்வது எப்படி?





அவல் கிச்சடி தயார் செய்வது எப்படி?

ஊற வைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்பட்டன. 
அவல் கிச்சடி தயார் செய்வது எப்படி?
தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. இந்த முறையில் தயார் செய்வதால் அதில் உள்ள முழுசத்தும் நமக்கு கிடைக்கிறது.
அரிசியின் வகைகளுக்கு தகுந்தார் போல அவலும் மாறுபடும். உதாரணமாக சிகப்பு அரிசியில் இருந்து சிகப்பு அவல், வெள்ளை அரிசியில் இருந்து வெள்ளை அவல் தயாரிக்கின்றார்கள்.

தேவையானப் பொருள்கள்:
அவல்_ 2 கப்

பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி

கேரட்_1/4 பாகம்

காலிஃப்ளவர்_கொஞ்சம்

சின்ன வெங்காயம்_10

தக்காளி_பாதி

இஞ்சி_ஒரு சிறிய துண்டு

பூண்டு_2 பற்கள்

பச்சை மிளகாய்_2

மஞ்சள் தூள்_சிறிது

உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன் கடுகு

உளுந்து

கடலைப் பருப்பு

சீரகம்

முந்திரி

பெருங்காயம்

கிராம்பு_2

பிரிஞ்சி இலை_1

கறிவேப்பிலை
செய்முறை:
அவல் கிச்சடி தாயாரித்தல்
பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவி விட்டு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். அவல் நன்றாக ஊறி இருக்க வேண்டும். ஆனால் குழைந்து இருக்க கூடாது.

கேரட்டை சிப்ஸ் கட்டையில் வைத்து சீவி அதன் பிறகு சிறுசிறு நீளத்துண்டுக ளாக்கவும். காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து சிறுசிறு பூக்களாகப் பிரித்து கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும். இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து விட்டு முதலில் இஞ்சி, பூண்டு வதக்கி விட்டு அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
அடுத்து கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

காய் வெந்ததும் அவலைக் கொட்டிக் கிளறவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். உப்பு தேவையானால் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். 

பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்துமல்லி தூவி இறக்கவும். இதற்கு தேங்காய் சட்னி, ஊறுகாய் வகைகள் நன்றாக இருக்கும்.
Tags: