நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் இட்லி இந்திய உணவு கிடையாது என்ற தகவலும் உண்டு. இது அதிர்ச்சியானதாக இருந்தாலும், சில வரலாற்று ஆசிரியர்கள் இட்லி முதலில் இந்தோனேசியாவில் தோன்றியதாகக் கருதுகின்றனர்.
இந்தோனேசிய உணவான கெட்லி தான் பரிணாம வளர்ச்சி பெற்று இந்திய உணவு இட்லியாக உருவெடுத்துள்ளது.
இட்லி பூப் போல மென்மையாக இருக்க அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனி கிண்ணங்களில் ஏராளமான தண்ணீரில் 4-6 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவுடன், உளுத்தம் பருப்பை வடிகட்டி, குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக, மென்மையான பேஸ்டாக அரைக்கவும். அரைத்த மாவை மூடி, ஒரு சூடான, மூலையில் சுமார் 8-12 மணி நேரம் வைக்கவும்.
அரிசியை நன்கு பசைபோல் அரைக்கக் கூடாது, ரவையில் பாதி அளவிற்கு அரைக்க வேண்டும். அதாவது அரிசி மாவு லேசாக கொரு கொருவென்று இருக்க வேண்டும்.
பின்னர் இரண்டையும் நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு மாவு தயார் செய்து இட்லி அவித்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு 1 கப்
புளித்த தயிர் 1 கப்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
நெய் 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
அவற்றை; களைந்து சுத்தப்படுத்தி வடித்தெடுத்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்,
அரைக்கும் போது உப்பு, பெருங்காயத்தூள் கலக்கவும். அரைத்தெடுத்த மாக்கலவையை 7-8 மணி நேரம் புளித்துப் போக (தோசைக்கு வைப்பது போல் பொங்க) வைக்கவும்.
பொங்கிய மாக்கலவையுள் மிளகு தூள், சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து கொள்ளவும். மாக்கலவை தோசைக்கலவை போல் இளகியதாக இராது கொஞ்சம் இறுக்கமாக இருத்தல் வேண்டும்.
அதன் பின்;
எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் உள்ள குண்டுகளில் பாதி அளவுக்கு மாவை ஊற்றி இடியப்பம், பிட்டு அவிய வைப்பது போல் இட்லிச் சட்டியில் வைத்து மூடி; ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை அவிய விடவும்.
இட்லி அவிந்ததும் இட்லித் தட்டை வெளியே எடுத்து அதன் மேல் கொஞ்ச தண்ணீர் தெளித்த பின் இட்லியை ஒவ்வொன்றாக எடுக்கவும்.