சூப்பரான மாதுளம்பழ ரைத்தா செய்வது எப்படி?





சூப்பரான மாதுளம்பழ ரைத்தா செய்வது எப்படி?

உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும் போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதைச் சாப்பிட்டால், மன அழுத்தம் குறையும்.
சூப்பரான மாதுளம்பழ ரைத்தா செய்வது எப்படி?
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான  ஆற்றல் கிடைக்கும்.
மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும். மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. 

மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.

மாதுளம் பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். 

அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும். வயோதிகத் தன்மையைத் தள்ளிப்போடும் பெரும்பாலான `ஆன்டி ஏஜிங்’ சீரம் மாதுளம் பழத்தின் கொட்டைகளில் இருந்து தான் தயாராகிறது. 
பழமாகச் சாப்பிடும் போது அதைவிட அதிகப் பலன்கள் கிடைக்கும். அயல்நாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். 

கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும். ஒரு சுவையான வண்ண மயமான மற்றும் எளிதாக செய்யக்கூடிய மாதுளை ரைத்தா.
தேவையான பொருட்கள்

தயிர் – ஒரு கப்

உப்பு – தேவைகேற்ப

மாதுளம் – கால் கப்

சாட் மசாலா – அரை டீஸ்பூன்
செய்முறை

ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின், மாதுளம், சாட் மசாலா சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். புலாவுடன் வைத்து பரிமாறலாம்.
Tags: