குழந்தைகளுக்கு கேரட் சப்பாத்தி செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு கேரட் சப்பாத்தி செய்வது எப்படி?

0
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். 
குழந்தைகளுக்கு கேரட் சப்பாத்தி செய்வது
கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. 
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல்  தடுக்கிறது. 

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேக வைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். 

வயிற்றுப்  போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பிலியில்லாமல் அரைத்து ஜுஸாகக்  குடிக்கலாம், விரைவில் குணமடையும்.

தேவையான பொருட்கள் :
துருவிய கேரட் - ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்

கோதுமை மாவு - ஒன்றரை கப்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

நுண்ணோக்கியின், தொலைநோக்கியும் தெரிந்து கொள்ள !

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் கோதுமை மாவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். 

பிறகு மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி 

சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சத்தான சுவையான கேரட் சப்பாத்தி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)