பருப்பு கீரை கிச்சடி செய்வது எப்படி?





பருப்பு கீரை கிச்சடி செய்வது எப்படி?

0
பருப்புக் கீரை வயிற்று கிருமிகளை அழிக்கும். இந்த கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் கோடை காலங்களில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். கல்லீரல் நோய்கள் தீரும். 
பருப்பு கீரை கிச்சடி
கால்சியம் சத்து குறைவாக இருப்பவர்களும், இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களும், இந்த கீரையை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். 
பெண்களுக்கு குறிப்பாக, பாலுட்டும் தாய்மார்களுக்கு மிகச்சிறந்த உணவாக இந்த கீரை உள்ளது. அதே போல, மாதவிடாய் கோளாறுகள் குணமாகும். இந்த கீரை பித்தத்தை நீக்கக்கூடியது. 

பித்தம் காரணமாக தலைசுற்றல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த கீரையை வாரம் 2, 3 முறையாவது சாப்பிட்டு வரலாம். இந்த கீரையில் கடையல், மசியல் செய்வார்கள். 

ஆனால், எப்போது பருப்புக்கீரை கடைசல் செய்தாலும், நிறைய பூண்டு சேர்த்து செய்ய வேண்டும். இதனால் கெட்ட கொழுப்புக்கள் நீங்கும்..

தேவையான பொருட்கள்

பருப்பு கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1

தக்காளி - 2

அரிசி - 1 1/2 கப்

பருப்பு - 1 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

மிளகாய் தூள் - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

நெய் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை

தக்காளி, ப.மிளகாய், வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

அடுப்பில் ப்ரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். 

அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் வேக விட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 
10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும். இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பருப்பு கீரை கிச்சடி தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)