சுவையான டின் மீன் கறி செய்வது எப்படி?





சுவையான டின் மீன் கறி செய்வது எப்படி?

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 
சுவையான டின் மீன் கறி செய்வது எப்படி?
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். 

பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது. 
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரிய வந்துள்ளது. 

சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது. சரி இனி டின் மீன் பயன்படுத்தி சுவையான டின் மீன் கறி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை.:

டின் மீன்- 1

வெங்காயம்- 1

பச்சை மிளகாய் -3

தக்காளி -2

உள்ளி / வெள்ளை பூண்டு- 4

கறிவேப்பிலை -15 இலைகள்

மிளகாய் தூள்- 2 மே.க

மல்லி தூள் -1 மே.க

மஞ்சள் தூள் -1/2 தே.க

சின்ன சீரகம் -1/2 தே.க

கடுகு -1/2 தே.க

எண்ணெய்- சிறிதளவு

நீர் -1 கோப்பை

உப்பு -தேவையான அளவு

செய்முறை .: 
சுவையான டின் மீன் கறி செய்வது
முதல்ல டின் மீனை வலை போட்டு ஒரு கடையில இருந்து பிடிச்சிட்டு வரணும். வெங்காயத்தை தோலுரிச்சு, நீளமாக வெட்டி எடுக்கணும். அதோட மிளகாயையும் நான்காக நீளவாக்கில் வெட்டி எடுக்கணும். 

தக்காளியை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள். உள்ளியை தோல் உரித்து, விழுதாக அரைத்து எடுங்க. 

இதோட ஆயத்த வேலைகள் முடிந்தது. இனி அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு சட்டியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்குங்க. 
கடுகை முதலில் போட்டு வெடிக்க விடவும். பின்னர் முறையே சீரகம், அரைத்த உள்ளி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு நன்றாக வதக்குங்க. 

நன்றாக வதங்கி வரும் போது சட்டியில் இருக்கும் கலவை அரைத்த விழுது போல வந்திருக்கும். இந்த கலவையோடு முதலில் மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடத்திற்கு அவிய விடுங்க.

பின்னர் தூள்களையும் உப்பையும் நீரையும் சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்க. இப்போ டின் மீன் கறி ரெடி…
Tags: