நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்க நன்கு பேலன்ஸ்ட் டயட்டை பின்பற்றுவது மிகவும் அவசியம்.
நம்முடைய தினசரி டயட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வது பல அபாய நோய்களை தடுக்க பெரிதும் உதவும். அந்த வகையில் பேரிச்சம் பழங்கள் நம் ஆரோக்கியத்தை பேணுவதில் எண்ணற்ற அதிசயங்களை செய்ய கூடியது.
தினசரி 3 பேரிச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நம்முடைய ஒட்டு மொத்த நல்வாழ்வில் அதிசயிக்கத்தக்க வகையிலான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலகின் பல வெப்பமண்டல பகுதிகளில் வளர்க்கப்படும் பேரிச்சை மரத்திலிருந்து கிடைக்கும் பழம் தான் பேரிச்சம்பழம். சமீபத்திய ஆண்டுகளில் பேரீச்சை மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். ஏராளமான மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டுள்ள பேரிச்சம் பழத்தில் மெட்ஜூல் மற்றும் டெக்லெட் நூர் போன்ற பல வெரைட்டிகள் உள்ளன.
பாலைவன பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் இது தான் முக்கிய இடம் பிடித்துள்ளது. இனிப்பு சுவை கொண்டிருக்கும் இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன.
குறிப்பாக பேரிச்சம் பழங்களில் காப்பர், மாங்கனீஸ், வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற சில முக்கிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் அதிகம் காணப்படுகின்றன.
பொதுவாக ஃபைபர் அதாவது நார்ச்சத்து மலச்சிக்கலை தடுத்து சிறந்த செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் இது இன்றியமையாதது. பேரிச்சம் பழங்களில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.
ராய கோலா பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
சோள மாவு - அரை கப்
உளுந்து மாவு - கால் கப்
தூளாக்கிய வெல்லம் - கால் கப்
பேரிச்சம்பழம் - 6 (சிறிதாக நறுக்கவும்)
சமையல் சோடா - சிறிதளவு
ஏலக்காய் - கால் தூள் டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சோளமாவை போட்டு அதனுடன் உளுந்து மாவையும் கலந்து ஒன்றாக சேருங்கள்.
பேரீச்சம் பழத்தையும் கலந்திடுங்கள்.
இன்னொரு பாத்திரத்தில் வெல்லத்தை கொட்டி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
அதனுடன் சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு உளுந்து - சோள மாவு - பேரீச்சம் பழம் கலந்த கலவையும் வெல்ல கரைசலுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
அதனை அரை மணி நேரம் அப்படியே வைத்திருங்கள்.
பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி மாவு கரைசலை ஊற்றி பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.
சூப்பரான சோளப் பணியாரம் ரெடி.