சிக்கனில் புரதம், வைட்டமின் பி 12, கோலின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இவற்றை அளவாக தினமும் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
கோழிக்கறியில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால் நினைவாற்றல் மேம்பட உதவுகிறது. இயல்பாகவே அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர்.
அதே போல, சிக்கன் குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நரம்பு மண்டலம் சரியாக செயல்பட உதவுகிறது மற்றும் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்திறனுக்கு உதவுகிறது.
சிக்கனில் புரதம் தவிர பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை வலுவாக்குகிறது.
ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுப்பதோடு, இதில் உள்ள செலினியம் கீல்வாதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆண்கள் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கட்டுப்படுத்தவும், விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
பொதுவாக இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். இவர்கள் சிக்கன் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.
அதே சமயம் நிம்மதியான உறக்கத்திற்கு உதவும். மேலும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் உடல் ரீதியிலான பிரச்சனைகளை நீக்கும்.
என்னென்ன தேவை?
சிக்கன் – 500 கிராம்
கொத்தமல்லி இலை – 1 கப்
புதினா இலை – 1 கப்
கறிவேப்பிலை – 1/2 கப் பேக்
பச்சை மிளகாய் – 7 முதல் 8
இஞ்சி – 2 டீஸ்பூன் விழுது
பூண்டு – 2 விழுது
தயிர் – 1/2 கப்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு /- 1/2 கப்
எண்ணெய்
உப்பு
எப்படி செய்வது?
மிக்ஸரில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், ஆகியவற்றை சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
மையாக அரைத்ததும் அதனுடன் தயிர் எலுமிச்சை சாறு, உப்பு, கரம் மசாலா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து அரிசி மாவு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஊற விடவும்..
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.