இலங்கை ஆட்டு எலும்பு ரசம் தாயாரித்தல் எப்படி?





இலங்கை ஆட்டு எலும்பு ரசம் தாயாரித்தல் எப்படி?

ஆட்டு எலும்பு சூப் பல நூற்றாண்டுகளாக பிரபலமான உணவாக இருந்து வருகிறது. அதன் சூப்பரான சுவை, உடல் நலப் பிரச்னைகளை குணப்படுத்தும் பண்பு பெயர் பெற்றது. 
இலங்கை ஆட்டு எலும்பு ரசம் தாயாரித்தல் எப்படி?
காலப்போக்கில், பல கலாசாரங்களில் எலும்பு சூப் ஒரு முக்கிய உணவாக மாறிவிட்டது. எலும்பு சூப்பை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை அளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

எலும்பு சூப்பில் குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கண்டறியப்படுகிறது. இது குடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும், கசிவு குடல் நோயைக் குணப்படுத்தும். 

ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தும்.  எலும்பு குழம்பில் கிளைசின் மற்றும் குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்கள் உட்பட நோயெதிர்ப்பு அமைப்புக்கு நன்மை பயக்கும் பல தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 
இந்த அமினோ அமிலங்கள் உடலில் லிம்போசைட்டுகள் மற்றும் பிற வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு முக்கியமானவை.

தேவையான பொருள்கள்: 

ஆட்டு எலும்பு – 250g

பழ புளி – சிறிய உருண்டை

தேசிக்காய் – பாதி

மஞ்சள் – 1/2 தே.கரண்டி

உப்பு – தேவைக்கு ஏற்ப

அரைப்பதற்கு:

காய்ந்த சிவப்பு மிளகாய் – 4

தனியா – 2 மே.கரண்டி

சோம்பு – 1 தே.கரண்டி

சீரகம் – 1 1/2 மே.கரண்டி

கராம்பு – 1

உள்ளி – 3 பல்லு

பெருங்காயம் – சிறு துண்டு

மிளகு – 5 அல்லது 6

இஞ்சி – சிறு துண்டு
செய்முறை
இலங்கை ஆட்டு எலும்பு ரசம் தாயாரித்தல்
ஆட்டு எலும்பை சுத்தம் செய்து மஞ்சள், உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். பின்பு புளியை 3/4 லிட்டர் தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்து அதனுள் எலும்பை போட்டு அளவான தீயில் நன்றாக அவிய விடவும்.
பின்பு அரைக்க வேண்டிய பொருட்களை அரைப்பதமாக அரைத்து அவிந்து கொண்டிருக்கும் எலும்பினுள் இட்டு மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி தேசிப்புளி விட்டு சுடச் சுட பரிமாறவும்.
Tags: