மாங்காய் இஞ்சி விஞ்ஞான ரீதியாக குர்குமா அமாடா என்று அழைக்கப் படுகிறது. இது ஒரு தனித்துவமான மசாலாப் பொருள் ஆகும். இது பார்ப்பதற்கு இஞ்சியை போன்று இருக்கும்.
இதை மாங்காய் இஞ்சி என்று அழைப்பதற்கு முக்கிய காரணம் இதன் சுவை மாம்பழத்தின் சுவை போன்று இருக்கும். இந்த இஞ்சி ஜிங்கிபெரேசியே என்ற இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது. மஞ்சளுடன் நெருங்கிய தொடர்பு உடையது.
இந்த மாங்காய் இஞ்சியை ஆயுர்வேதத்தில் நிறைய வழிகளில் பயன்படுத்துகின்றனர். காய்ச்சல், தோல் வியாதிகள், ஆஸ்துமா மற்றும் வயிற்று கோளாறுகளை போக்க உதவுகிறது.
இந்த இஞ்சியை ஊறுகாய், சட்னி மற்றும் சாஸ்களில் பயன்படுத்தலாம். இதில் ஆன்டி பைரியடிக் தன்மை, அழற்சி எதிர்ப்பு தன்மை, டையூரிடிக் தன்மை மற்றும் மலமிளக்கி தன்மை போன்றவை காணப்படுகிறது.
இதை யுனானி மருத்துவத்திலும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். மாங்காய் இஞ்சியில் ஆன்டிடிரஸன் பண்புகள் காணப்படுகிறது. இதில் மனதை அமைதிப்படுத்தும் பண்புகள் இதில் காணப்படுகிறது.
கார்மினேட்டிவ் பண்புகள் இதில் காணப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்துகிறது, கவலை, மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்ற மனச்சோர்வு அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுகிறது.
இந்த மசாலாவின் வாசனை மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. மாங்காய் இஞ்சியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. மரபணு செயல்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை தடுக்கிறது.
கீமோதொரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் சேர்ந்து இதை பயன்படுத்தி வரலாம். மாங்காய் இஞ்சியில் ஆக்ஸினேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
தே.பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 8
புளிகரைசல் - 1 கப்
வடகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வதக்கி அரைக்க
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
துருவிய மாங்காய் இஞ்சி - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
செய்முறை :
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி மைய அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம் + வடகம் + கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் + தக்காளி + பூண்டுப்பல் + அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
பின் புளி கரைசல் + உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.