கோதுமை பஞ்சாபிகளின் முதன்மையான உணவு. தற்போது தென்மாநில மக்களிடமும், கோதுமை தனியிடம் பிடித்து வருகிறது. பொதுவாக தெரிந்த இந்த குணங்களை தவிர சிறப்பு தன்மைகள் பல நிறைந்தது.
முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப் படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்புபட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும். வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.
கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும்.
இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். ரொட்டி கோதுமை மற்றும் மக்ரோனி கோதுமையைத் தவிர மற்றும் ஒரு கோதுமை வகைதான் சம்பா கோதுமை.
நுண்ணோக்கியின், தொலைநோக்கியும் தெரிந்து கொள்ள !
தேவையான பொருட்கள் :
தினை மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்து, வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள்.
ஆன்டிராய்டு லாலிபாப் பற்றி நீங்க தெரிந்து கொள்ள !
சத்தான தினை மற்றும் கோதுமை மாவு இணைந்த சப்பாத்தி தயார் !