தேங்காய் பால் சேர்த்து சாமை காய்கறி கஞ்சி செய்வது எப்படி?





தேங்காய் பால் சேர்த்து சாமை காய்கறி கஞ்சி செய்வது எப்படி?

0
பசையம் இல்லாத உணவுகள் தானியங்கள். சிறிய தினையான சாமை ஆரோக்கியத்தை அள்ளித்தரக் கூடியது. Panicum sumatrense அல்லது Little millet என்று அழைக்க கூடிய இவை அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறந்த உணவாக இருக்கும். 
தேங்காய் பால் சேர்த்து சாமை காய்கறி கஞ்சி
சைவ உணவு எடுப்பவர்களுக்கு புரதம் நிறைந்த இதை தினசரி ஒரு வேளையேனும் எடுக்கலாம். சாமை எளிதாக ஜீரணிக்க கூடியவை. கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்ப கூடும். 

கார்போ ஹைட்ரேட் அதிகம் என்றாலும் இது எளிய சர்க்கரை கொண்ட கார்போ ஹைட்ரேட் உணவும் கூட. இதில் வைட்டமின் பி, வைட்டமின் பி 6, ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. 
பாரம்பரியமான உணவு பழக்கங்களை மேற்கொண்டவர் களுக்கு மாதவிடாய் கோளாறுகள் பிரச்சனைகள் அதிகம் இல்லை. 

தற்போது ஊட்டச்சத்து பற்றாக் குறையால் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், அதிக உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரபோக்கு, அதிக வலி, உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனையை எதிர் கொள்கிறார்கள்.

போதுமான ஊட்டச்சத்து சரியான முறையில் சேரும் போது மாதவிடாய் கோளாறுகள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு. 

அதோடு கருப்பை ஆரோக்கியமும் வலுப்படும். கருப்பை உயிர் சக்தி தந்து பெண்களுக்கு இரத்த சோகை இல்லாமல் செய்வதில் சாமை தனித்துவமானதாக விளங்குகிறது.

தேவையான பொருட்கள்:

சாமை - அரை கப்

பயத்தம் பருப்பு - அரை கப்

பச்சை மிளகாய் - 2

கேரட், பீன்ஸ் - 1/4 கப்

இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

தேங்காய் பால் - 100 மில்லி

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

தனியாத்தூள் - 1/4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

தாளிக்க - பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு

செய்முறை:

சாமை அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பயத்தம் பருப்பை வறுத்து கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிய பின், அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு பயத்தம் பருப்பு, சாமை, மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். பிரஷர் குறைந்தும், மூடியைத் திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து, உடனே அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான சாமை கஞ்சி தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)