மாம்பழம் என்று சொன்னாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மாம்பழ சீசனுக்காக காத்திருப்பவர்கள் பலருண்டு. மஞ்சள் நிறத்தில் நன்கு பழுத்த மாம்பழத்தை கடித்து சாப்பிடும் சுவையே தனி தான்.
ஆனால் மாம்பழத்தை விரும்பி சாப்பிடும் ஒவ்வொருவரும் மறந்தே கொட்டையை தூக்கிப் போடுவது தான் வழக்கம். ஆனால் அதனுள் மறைந்திருக்கும் மருத்துவ குணங்களை பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் .
பழத்தை போலவே அதன் கொட்டையிலும் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளது. இன்று மாங்கொட்டையின் பொடியும் மார்க்கெட்டில் கிடைக்கின்றது .
அதை பயன்படுத்துவதாலும் ஏகப்பட்ட நன்மைகளை நாம் பெற முடியும். ஆனால் இந்த செய்தியில் மாங்கொட்டை என்னை பற்றி நாம் தெரிந்து கொள்ள போகிறோம் ..
இந்த எண்ணெயானது சுவாசக்கோளாறுகள் முதல் சரும பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு என பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது..
மாங்கொட்டை எண்ணெயின் நன்மைகள் ...
மாம்பழம் என்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு பழம். மாம்பழத்தில் ஆரோக்கிய பலன்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
மாமரத்தின் இலைகள் நீரிழிவு நோய்க்கு சிறந்த பலன் அளிக்கக் கூடியது. அதே போல மாங்கொட்டை மற்றும் மாங்கொட்டை எண்ணெய் மருத்துவ பலன்களை கொண்டுள்ளது ..
மாங்கொட்டையின் பலன்கள் ..
கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள் உணவில் மாங்கொட்டை எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கொழுப்பை குறைக்க உதவும்..
எனவே அதிகமான கொழுப்பால் அவதிப்படுபவர்கள் அவர்களது உணவில் மாங்கொட்டை எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் .
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் .
இந்த மாங்கொட்டை எண்ணெயானது உடல் எடையை பராமரிக்க பெரிதும் உதவும். மேலும் இது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உடலில் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது ..
ஆரோக்கியமான சருமம் ..
மாங்கொட்டை எண்ணெயை வைத்து வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து உபயோகிப்பதன் மூலம் இளமைத் தோற்றத்தையும் ஜொலிக்கும் சருமத்தையும் பெற முடியும் .
இது முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் அதன் தழும்புகளை நீக்கிட உதவும். இந்த எண்ணெயை பயன்படுத்தி தொடர்ந்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் ..
கூந்தல் வளர்ச்சிக்கு ..
மாங்கொட்டை எண்ணெய் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும் அது மட்டுமில்லாமல் முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இதைப் பயன்படுத்துவதன் மூலம் அந்தப் பிரச்சினையில் இருந்து சுலபமாக விடுபடலாம்.
அதற்கு எண்ணையை கூந்தலில் தேய்த்து சாதாரணமாக மசாஜ் செய்து பின்னர் 20 நிமிடங்கள் கழித்து குளித்துவந்தால் ஆரோக்கியமான கூந்தலைப் பெற முடியும் .
இது போன்ற வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தாலே போதும் ஆரோக்கியமான அழகான கூந்தலைப் பெற முடியும் . இந்த எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின்கள் தாதுக்கள் போன்றவை அழகான கூந்தலுக்கு உதவுகிறது .
குறிப்பு ...
இந்த மாங்கொட்டை எண்ணெயை சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது மிகவும் நல்லது . அப்போது தான் இதனால் உங்களுக்கு அலர்ஜி ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும் .
மேலும் இதனை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால் குறைந்த அளவிலேயே சேர்த்துக் கொள்ளுங்கள். சிலருக்கு மாம்பழத் தோல் அலர்ஜி உண்டாகும்
அப்படி அலர்ஜி உள்ளவர்கள் யாரும் இதனை பயன்படுத்த வேண்டாம் . ஆனால் இதனால் எந்தவித பக்க விளைவும் கிடையாது . இருப்பினும் இதனை உபயோகப்படுத்திய பக்க விளைவுகள் உண்டானால் உடனே மருத்துவரை அணுகவும் .