தேவையான பொருட்கள்
பீஃப் – 500 கிராம்
மல்லி தூள் – 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1.5 தேக்கரண்டி
நல்ல மிளகு தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
ஜீரகத் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
குழம்பு வைக்க :
தேங்காய் எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
வெங்காயம் – 2 (பெரியது)
தக்காளி – 2 (பொரியது)
மல்லி தூள் – 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
நல்ல மிளகு தூள் – 1 தேக்கரண்டி
ஜீரகத் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1.5 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கெட்டித் தேங்காய் பால் – கப்
நீர் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கறி வேப்பிலை – 1 கைப்பிடியளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
மல்லி தளை – தேவையான அளவு
மசாலா
சோம்பு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 3
நட்சத்திர சோம்பு – 1
கிராம்பு – 3
பே லீஃப் – 1
கல் பாசி – 1 துண்டு
ஜீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை – 2 செமி துண்டு
செய்முறை
பீஃபை சிறிய துண்டுகளாக நறுக்கி மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள், ஜீரகம் மற்றும் கரம் மசாலா தூள், சேர்த்து பின்பு இஞ்சி பூண்டு விழுது, மற்றும் சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.
அதன் பின் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி 15 நிமிடங்கள் தனியே வைக்கவும். பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடான பின் பீஃப் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பின்பு சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் பிரஷர் குக்கரை மூடி வைத்து பீஃப் வேகும் வரை 15 முதல் 20 விசில் விட்டு வேக வைக்கவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு வெங்காயமும் உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வேக வைத்து கறி வேப்பிலை சேர்க்கவும்.
கறி வேப்பிலை லேசாக பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து.
சிறிது நேரம் வதக்கவும் பின்பு தக்காளி சேர்த்து மசியும் வரை வேக வைத்து மிளகாய் தூள், மிளகு தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஜீரகம் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்பு வேக வைத்த பீஃபை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் சிம்மில் வைத்து பின்பு கெட்டித் தேங்காய்ப் பால் சேர்த்து அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ளவும் .
சிறிது நேரம் சிம்மில் வைத்து பின்பு மல்லித் தளை சேர்த்து நன்கு கலக்கவும். பீஃப் மசாலா குழம்பு ரெடி !