குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. 
குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம் செய்வது எப்படி?
தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். பொதுவாக, தேங்காய் அனைவருக்கும் நல்லது. 
ஆனால் அதிக கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. எலும்புகளை பலப்படுத்தி, சரும நோய்களை தீர்த்து, இரத்த சோகையை விரட்டும் தேங்காய் பால். 

உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. 

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. சிலர் தேங்காய்களை சிறந்த உணவாக கருதுகின்றனர், 
மற்றவர்கள் எல்லா விலையிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று நம்புகிறார்கள். இந்த பால் குறைந்த கொழுப்பு வகைகளை மிதமாக உட்கொள்ளலாம். 

(வாரத்திற்கு 1-2 முறை). தேங்காய் எண்ணெய் போன்ற நிறைவுற்ற கொழுப்புகள் சமைக்கும் போது பரிந்துரைக்கப் படுவதில்லை.

சுவையான வறுத்தரைத்த காளான் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.: 

பாஸ்மதி அரிசி – 200 கிராம், 

உடைத்த உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், 

பச்சை மிளகாய் – 2, 

முந்திரிப் பருப்பு – 10 (வறுத்துக் கொள்ளவும்), 

நன்கு முற்றிய தேங்காய் – ஒன்று, 

கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன், 

தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, 

செய்முறை.: 
குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம்
அரிசியுடன் ஒரு பங்குக்கு ரெண்டு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ரெண்டு விசில் விட்டு இறக்கவும். தேங்காயை உடைத்து துருவிக் கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவலைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு வறுத்த தேங்காய்த் துருவல், தாளித்த பொருள்கள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு நன்றாகக் கலக்கவும். 
வறுத்த முந்திரிப் பருப்பை மேலே பரவலாக சேர்க்கவும். குறிப்பு: சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலந்தால், வாசனை நன்றாக இருக்கும்; ருசியும் கூடும்.
Tags: