அருமையான உருளைக்கிழங்கு டோஃபி செய்வது எப்படி?





அருமையான உருளைக்கிழங்கு டோஃபி செய்வது எப்படி?

பொதுவாக உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கு மற்றும் ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு மருந்தாகச் செயல்படும். 
அருமையான உருளைக்கிழங்கு டோஃபி செய்வது எப்படி?
அதுவும் உருளைக்கிழங்கின் தோலில் அளவுக்கு அதிகமானப் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. ஆனால் நாம் என்ன செய்வோம்? அதனை நீக்கி விட்டு தான் சமைப்போம். 
ஆனால் இந்தத் தோல்கள் தான் உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. அதேபோல் உருளைக்கிழங்கு புண்களையும் ஆற்றும். அதாவது வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிறு தொடர்பான கோளாறுகளை நீக்கும். 

மேலும் இதனால் அசுத்தநீர் தங்காமல் வெளியேறி விடுகிறது. உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் கூட சிலர் அதனை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது. 

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது என ஒரு ஆய்வில் கண்டறியபட்டது. 

தேவையான பொருட்கள்

மாவிற்கு…

மைதா – அரை கப்,

உப்பு – 1/2 டீஸ்பூன்,

ஓமம் – 1/4 டீஸ்பூன்,

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
தண்ணீர் – தேவைக்கு.

பூரணத்திற்கு…

உருளைக்கிழங்கு – 1,

பச்சை மிளகாய் – 2,

கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு – சிறிது,

வெங்காயம் – 1,

கடலை மாவு – 1 டீஸ்பூன்,

உப்பு – 1/2 டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – தலா 1/4 டீஸ்பூன்,

பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை :
உருளைக்கிழங்கு டோஃபி
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொண்டு. பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து கடாயில்  எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அடுத்து முதலில் மசித்த உருளைக்கிழங்கை, மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு, கொத்த மல்லியுடன் சேர்த்து வதக்கி, அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3 பாகங்களாக கீறி விடவும். 
பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும். சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி ரெடி.
Tags: