குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?





குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?

0

கோடைகாலத்தில் தவறாமல் தயிர்  சாப்பிடும் பழக்கத்தை அனைவரும் பின்பற்றி  இருப்பார்கள். ஆனால் குளிர்காலம் தொடங்கிய உடன் தயிரை பயன்படுத்துவதற்கு அனைவரும்  தயங்கவும் தான் செய்கிறார்கள்.

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?
கோடைக்காலம் மட்டுமின்றி குளிர் காலத்திலும் தயிர் சாப்பிடுவது மிகவும் நல்லது. இருப்பினும் காலை மற்றும் பகல் வேளை உணவுடன் சாப்பிடுவதே சிறந்ததாக கருதப்படுகிறது. 
இரவிலும் தயிர் சேர்த்துக் கொள்வதாக இருந்தால்  அதனுடன் சிறிதளவு சர்க்கரை அல்லது உப்பு சேர்ப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது .

குளிர் காலத்தில் தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்று பார்ப்போம். சப்பாத்தி தயார்  செய்யும்போது கோதுமை மாவுடன் சிறிதளவு தயிரை சேர்த்துக் கொள்ளலாம். 

அது சப்பாத்தியில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். மேலும்  சப்பாத்தியும் மிகவும் மென்மையாக மாறும். பழங்கள் சாப்பிடும் அளவிற்கு காய்கறிகளை சாப்பிடுவதற்கு குழந்தைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள் .  

முட்டைக்கோஸ் ப்ராக்கோலி காலிஃப்ளவர் வெள்ளரிக்காய் வெங்காயம் கீரை காளான் பட்டாணி  குடைமிளகாய் முள்ளங்கி தக்காளி போன்றவற்றை சாலட் தயார் செய்து அதனுடன் தயிர் கலந்து பரிமாறலாம். 

குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தை குறைக்கும். மேலும் அன்னாசிப்பழம் பாகற்காய் வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து சாலட் தயாரித்து சாப்பிடலாம்.

குளிர் காலத்தில் நோய் இருப்பு தன்மையை  அதிகரிக்கச் செய்ய இந்த தயிர் மிகவும் பயன்படுகிறது.  

தயிர் உடலுக்குள் நுழைந்து வயிற்றுக்கு எதிராக செயல்படும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு மிகவும் உதவுகிறது .

குளிர் காலத்தில் உணவுடன் தயிர் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான அமைப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற முடியும். அதே நேரத்தில் சளி காய்ச்சல் இருந்தால் தயிரை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மலச்சிக்கல் தீர கவனிக்க வேண்டிய விஷயங்கள் !

தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)