மிளகாய்த் தூளில் எப்படி கலப்படம் செய்கிறார்கள் !





மிளகாய்த் தூளில் எப்படி கலப்படம் செய்கிறார்கள் !

0

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாப் பொருள்களில் மிளகாய்த்தூளுக்கு முக்கியப் பங்குண்டு. சிவப்பு மிளகாயை உலர வைத்து, அரைத்து, சேமித்து வைத்துப் பயன்படுத்திய காலம் மலையேறி விட்டது. 
மிளகாய்த் தூளில் எப்படி கலப்படம்

50 கிராம் பாக்கெட் முதல் கிலோ கணக்கிலான பெட்டி வரை, இன்ஸ்டன்ட் மிளகாய்த்தூள் வகைகள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன. 

ஆனால், அவை எந்தளவுக்குப் பாதுகாப்பானவை, அவற்றில் கலப்படம் செய்ய முடியுமா, கலப்படங்களை எவ்வாறு கண்டறிவது, சுத்தமான மிளகாய்த்தூளை வீட்டிலேயே எப்படித் தயார் செய்வது?
'கான்சர்ட்’ நிறுவனம், இந்திய நுகர்வோர் துறையின் அனுமதியின் பெயரில் மிளகாய்த்தூள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

உலகளவில் தரமான மிளகாய் வகைகள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நம் நாட்டில் ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மிளகாய் விளைச்சல் நடக்கிறது. 

காஷ்மீரி (நிறத்துக்காகப் பயன்படுத்தப்படும் மிளகாய்), புக்கட் ஜோல்கா (கோடை வெப்பத்துக்குத் தீர்வு தரும் மிளகாய்), குண்டூர் (ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்), 
மிளகாய்த் தூளில் எப்படி கலப்படம் செய்கிறார்கள் !
ஜோவ்லா (குஜராத்), கந்தாரி (கேரளம்) மற்றும் ஹவாரி (கர்நாடகம்) என இந்திய மிளகாயை ஆறு வகையாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றிலும் சில முக்கிய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

வேக வைத்து, உலர வைப்பதால் மிளகாயின் காரத்தன்மை குறைந்து போகும். எனவே, காரத்தன்மையை அதிகரிப்பதற்காக, மிளகாயை வேக வைக்கும் போது அதோடு ‘கால்சியம் ஸ்டோன்’கள் கலக்கப்படுகின்றன.
இது விலையுயர்ந்த பொருளாக இருப்பதால், அதனுடன் மிளகாய் காம்பு, இதழ்கள் முதலியன சேர்க்கப்பட்டு அரைக்கப் படுகின்றன.

இதனால் அதன் வண்ணம் குறையும் என்பதால், அதில் சூடான் வண்ணம் எனும் பெட்ரோலியப் பொருளுக்கு போடப்படும் வண்ணம் சேர்க்கப் படுகிறது. இதைச் சாப்பிடுவதால் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

மேலும் சில இடங்களில்பொடியின் நிறத்தை அடர்த்தியாக்கவும் அதன் பதத்தை கனமாக்கவும் ரெட் ஆக்ஸைடு மற்றும் ரூடோ அமினைன் பி எனும் வேதிப்பொருள்களோடு, ஸ்டார்ச் மற்றும் இதர மாவுகள் கலக்கப்படுகின்றன. 
மிளகாய்த் தூள்
பொதுவாக, மிளகாய்த்தூள் தயாரிப்பில் 2 சதவிகித வெஜிடபிள் எண்ணெய் பயன்படுத்தலாம் என்பது அனுமதிக்கப்பட்ட அளவு. ஆனால், சிலர் மினரல் எண்ணெய்களைப் பயன்படுத்து கிறார்கள். இவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்கள் அதிகம் உள்ளன. என்கிறது அந்த ஆய்வு.

மொத்த நுகர்வோரில், 75% பேர் நிறுவனத்தின் பெயரை மட்டுமே பார்த்து விட்டு, அதிலுள்ள தகவல்களை கவனிக்காமல் வாங்குகிறார்கள்.
நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க இதை பயன்படுத்துங்கள் !
மீதமுள்ள 25% பேரில் 39% நுகர்வோர் பயன்பாட்டு நாளையும், 27% நுகர்வோர் தயாரிப்பு தேதியையும் பார்த்து வாங்குகிறார்கள்.

மிளகாய்த்தூளில் உள்ள சத்து
மிளகாய்த்தூளில் உள்ள சத்து
மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தி தர வல்லது. 

எடைக்குறைப்பு சிகிச்சை, மலச்சிக்கல், உமிழ்நீர் சுரப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீராக்குவது போன்ற செயல்பாடுகளில் பச்சை மிளகாய்க்கு முக்கியப் பங்குண்டு. 

ஆனால், அளவுக்கு அதிகமாக மிளகாயை உணவில் சேர்க்கும்போது அஜீரணக் கோளாறு, பெப்டிக் அல்சர், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் உள் அழற்சி (Internal Inflammation) போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஏன் மிளகாய்த்தூள்?
ஏன் மிளகாய்த்தூள்?
பச்சை மிளகாயில் இருக்கும் அதிகப் படியான நீரின் காரணமாக இரண்டு முதல் ஏழு நாள்களில் அழுகிப்போய் விடும் அதன் தன்மையே, அதைப் பொடியாகத் தயாரிக்கும் வழக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது. 

எனவே, அந்தக் காலத்தில் பச்சை மிளகாயைப் பழுக்க வைத்து, இரண்டு முதல் ஐந்து நாள்கள் வரை வெயிலில் நன்கு உலர வைத்து, அரைத்து சேமித்து வைத்துக் கொண்டார்கள். 
இப்படி உலர வைக்கும் போது அதிலிருக்கும் காரத்தன்மை குறைவதாலும், தண்ணீரின் உள்ளடக்கம் பச்சை மிளகாயில் அதிகமுள்ளதால் எளிதில் கெட்டுப்போக வாய்ப்பிருந்ததாலும் நாளடைவில் மிளகாய்த்தூள் தயாரிக்கும் முறை வெவ்வேறு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. 

உதாரணமாக, பழுத்த மிளகாயை வேக வைத்து, வடிகட்டி, பிறகு உலர வைத்துப் பொடியாக அரைப்பது ஒரு வகையான செய்முறை. இதனால், பழுத்த மிளகாயிலிருந்து கெட்ட பாக்டீரியா வெளியேற்றப்பட்டு, உலர்த்துவதற்கு மிகவும் எளிதாக மாற்றப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)