MSG உப்பு என்றால் என்ன? - Monosodium glutamate #MSG #Chinasalt





MSG உப்பு என்றால் என்ன? - Monosodium glutamate #MSG #Chinasalt

0

உணவுக்கு சுவை கூட்ட பயன்படும் ஒரு வேதியியல் உப்பு இது. இந்த உப்பை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர் அஜி னோமோட்டோ. MSG  உப்பு என்றால் என்ன?

அந்த நிறுவனத்தின் பெயராலேயே இந்த உப்பை அழைக்கிறார்கள். MSG (Monosodium glutamate) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த உப்பின் வேதியியல் பெயர் மோனோ சோடியம் குளூட்டாமேட். 

கடல் பாசியில் இருந்து தயாரிக்கப் பட்ட அஜினோமோட்டோ தற்போது கோதுமை, பீட்ரூட், கரும்பு போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உப்பை 👉உணவில் சுவை கூட்ட பயன்படுத்தினார்கள்.

இந்த உப்பில் சோடியமும் குளூட்டாமேட்டும் அடங்கியிருக்கிறது. சோடியம் அன்றாடம் நாம் பயன்படுத்தும் உப்பில் நிறைந்திருக்கிறது. 

யோகா எப்போது செய்ய வேண்டும்? | Yoga !

நமது உடலில் இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், நரம்பு மற்றும் தசைகளின் இயக்கம் சீராக இருக்க சோடியமும் சீராக இருக்க வேண்டும். 

ஆனால் இவை அளவுக்கு அதிகமாகும் போது உடல் அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளாகிறது.

அடுத்தது குளூட்டாமேட். அன்றாட தேவைக்கு ஏற்ற அளவை நாம் உணவின் மூலமாக பெற்று விடுகிறோம் என்பதால் 

இவற்றின் அளவு அதிகரிக்கும் போது மூளையின் முக்கிய பகுதியைச் சிதைத்து பல உபாதைகளை உண்டாக்கி விடும்.

ஏனெனில் அஜினோமோட்டோவில் சோடியம் 22% குளூட்டாமேட் 78% அளவு இருப்பதால் இவை நிச்சயம் பாதிப்பை மட் டுமே உண்டாக்கும்.

எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது

Monosodium glutamate

பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருள்களில் சுவையூட்டவும், அதை பதப்படுத்துவதற்கும், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், 

துரித உணவுகள் அனைத்திலும் இந்த வேதியியல் உப்பு அதிகப்படியான சுவையூட்டவே என்று சேர்க்கப்பட்டு வருகிறது. 

ஆரம்பத்தில் இந்த உப்பு உணவகங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. 

ஒரு கட்டத்தில் உணவில் அதிகப்படியான சுவையைக் கொடுக்கும் என்று விளம்பரங்கள் அதிகமாகவே, பெரும்பாலான மக்கள் வீட்டில் சமைக்கும் போதும் அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

மாதா மாதம் மளிகை லிஸ்ட்டில் 👉அஜினோமோட்டோ பெயரில்லாமல் இருக்காது. 

நஞ்சை வாங்குகிறோம் என்றே தெரியாமல் இன்றும் மக்கள் இந்த வேதியியல் உப்பை சேர்த்தால் தான் உணவு சுவையாக இருக்கும் என்று நம்பி கொண்டிருக்கி றார்கள்.

பாதிப்பு

உப்பு என்றால் என்ன?

அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி 1968 ஆம் ஆண்டு இந்த MSG வேதியியல் உப்பை ஆய்வு செய்தது. 

சீரான அளவு எடுத்து கொள்ளும் போது இது எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது என்று தெரிவித்தது. 

ஆனால் எல்லா உணவு வகைகளிலும் இந்த வேதியியல் உப்பை பயன்படுத்தும் போது 

அவை உடலில்👈 சீராக இல்லாமல் அளவுக்கதிகமாகவே சேர்கிறது. அதனால் இவை ஆபத்தை மட்டுமே உண்டாக்குகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)