ஆரோக்கியமாக இருக்க குளிக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள் !





ஆரோக்கியமாக இருக்க குளிக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள் !

0

உங்கள் கூந்தல் (Hair) நலனை காப்பது என்று வரும் போது, அம்மாக்கள், பாட்டிகள், சிகையலங்கார வல்லுனர்கள், தோழிகள் என்று எல்லோரும் எல்லா வகையான ஆலோசானைகளயும் அளிப்பார்கள். 

ஆரோக்கியமாக இருக்க குளிக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள் !
நமக்கு தெரிந்து செய்யும் தவறுகளை விட, நம்மையே அறியாமல் நாம் செய்யும் தவறுகள் தான் அதிகம். இது உறவுகள், வேலை, ஆரோக்கியம் சார்ந்து அனைத்திற்கும் பொருந்தும். 

அந்த வகையில் நாம் குளிக்கும் போதிலும் கூட நமக்கு தெரியாமல் பல தவறுகளை பல வருடங்களாக செய்து வருகிறோம்.

டாய்லெட் பேப்பர் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதானாம் !

ஷேவிங் செய்வது, ஸ்க்ரப் பயன்படுத்துவது, சோப்பு, ஷாம்பூ, கண்டிஷனர், குளித்த பிறகு உடல் துவட்டுவது என பல விஷயங்களில் தவறுகள் செய்து வருகிறோம். 

இதனால் தான் பலருக்கு அடிக்கடி கண்ட இடத்தில் அரிப்பு ஏற்படுவது, உடல் சருமம் வறட்சியாக இருப்பது போன்ற தொல்லைகள் உண்டாகின்றன.

குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீர்

குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீர்

ஷவரில் இருந்து சூடான தண்ணீர் பொழியும் போது அதன் கீழ் நின்று கொண்டிருப்பது இதமளிப்பதாக தோன்றலாம். 

ஆனால் இது உங்கள் கூந்தலின் நீர்த்தன்மையை நீக்கி, உலர் தன்மை மற்றும் உடைந்த முனை பாதிப்பை உண்டால்லாம். 

எனவே எப்போதும், வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை (Hair) அலசவும். இதன் மூலம் கூந்தலில் உங்கள் ஈர்பதத்தை தக்க வைத்து கொள்ளலாம்.

ஷேவிங்!

ஷேவிங்!

குளிப்பதற்கு முன் ஷேவிங் / வேக்ஸிங் செய்வது அல்லது, ஷேவிங் / வேக்ஸிங் செய்த உடனே குளிப்பது சருமத்தின் துளைகள் பெரிதாக காரணமாகிறது. 
பெண்களின் உயிரை வாங்கிய அந்த கால கருத்தடை சிகிச்சை !

ஆதலால் இதை தவிர்த்து விடுங்கள். இதற்கு மாறாக குளித்த பிறகு ஷேவிங் அல்லது வேக்ஸிங் செய்யுங்கள்.

ஷாம்புவை நீர்க்க செய்தல்

ஷாம்புவை நீர்க்க செய்தல்

ஷாம்பு உங்கள் கூந்தலில் இருந்து அழுக்கு மற்றும் எண்ணெயை பசையை அகற்ற உருவாக்கப்பட்டது. 

ஆனால், அதற்கு இயற்கை மற்றும் செயற்கை எண்ணெய் பசை இடையே வேறுபாடு தெரியாது. எனவே உங்கள் ஷாம்புவில் சிறிதளவு தண்ணீர் கலந்து அதை நீர்க்கச்செய்து அதன் பின் பயன்படுத்தவும்.

தேய்த்து குளிப்பது!

தேய்த்து குளிப்பது!

ஆண்களைவிட, பெண்கள் தான் இந்த தவறை அதிகம் செய்கின்றனர். முகத்திற்கு குளிக்கும் போது சுழற்சி முறையில் சருமத்தை அதிகம் தேய்த்து குளிப்பார்கள்.
காசநோய் மலட்டுத்தன்மையை உண்டாக்குமா? எப்படி தடுப்பது?

கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்பட்ட சோப் கொண்டு அதிகம் தேய்ப்பதால், சருமத்தின் மேல் பகுதி லேயர் சேதமாகி, எளிதாக தொற்று உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.

தலை முடியை உலர வைத்தல்

தலை முடியை உலர வைத்தல்

முடிந்த வரை, உங்கள் கூந்தலை (Hair) இயற்கையாக உலர வையுங்கள். டிரையர் பயன்படுத்துவது தவிர்க்க இயலாது எனில், கூந்தலை (Hair) ஓரளவு உலர வைத்து விட்டு பின்னர் டிரையர் பயன்படுத்தவும்.

ஸ்க்ரப்!

ஸ்க்ரப்

உடல் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் ஸ்க்ரப்பை பயன்படுத்திய பிறகு சிலர் அப்படியே சோப்பு நுரையுடன் வைத்துவிடுவார்கள்.

இதனால் பாக்டீரியாக்கள் அதிகம் அதில் வளர்ந்து , மறுமுறை பயன்படுத்தும் போது உடலில் அரிப்பு உண்டாக காரணி ஆகிறது. எனவே, ஸ்க்ரப்பையும் கழுவி வைக்க வேண்டியது அவசியம்.

ஈரமான டவல்!

ஈரமான டவல்!

குளித்த பிறகு உடல் மற்றும் முடியில் இருக்கும் ஈரத்தை போக்க டவல் பயன்படுத்திய பிறகு அதை உடனே அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.

நம் உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் தெரியுமா? உங்களுக்கு... !

சிலர், அதை உடலிலே / தலையில் கட்டிக் கொண்டு வீடு முழுக்க உலா வருவார்கள். இதனால், அதிக முடி உதிர்வு மற்றும் சரும வறட்சி அடையும்.

சோப்பு!

சோப்பு!

சோப்பை அதிகம் பயன்படுத்துவதால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் அளவும் முற்றிலும் பாதிக்கப்படும். 

இதனால் அதிகளவில் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும், அந்தரங்க பகுதிகளில் அதிகம் சோப்பு பயன்படுத்த வேண்டாம்.

டியோடரண்ட்!

டியோடரண்ட்

குளித்த உடனே டியோடரண்ட் பயன்படுத்தினால், நறுமணம் உடலிலே அதிகம் இருக்கும் என பலர் எண்ணுகின்றனர்.

உங்கள் புருவங்கள் அடர்த்தியாக?

ஆனால், இதனால் சரும எரிச்சல், வறட்சி தான் அதிகமாகும். பவுடர்-ம் கூட குளித்த உடனேயே பயன்படுத்த வேண்டாம். இவை எல்லாம் கெமிக்கல் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உடற்பயிற்சி!

உடற்பயிற்சி

சிலர் உடற்பயிற்சி செய்த உடனேயே குளிப்பார்கள். இது அவர்களை புத்துணர்ச்சியாய் உணர உதவுகிறது. 

ஆனால், உடற்பயிற்சி செய்த பிறகு முப்பது நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரமாவது கழித்து தான் குளிக்க வேண்டும்.

ஈரப்பதம்!

ஈரப்பதம்

மாய்ஸ்சுரைசர் அப்ளை செய்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். இதனால் வறட்சி, க்ரேக் ஏற்படும் பிரச்சனை வரலாம்.

கண்டிஷனர்!

கண்டிஷனர்

வெகு சிலர் தான் ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் பயன்படுத்துவார்கள். 
ஆண்களே உங்கள் மச்சபலன் பற்றி அறிய ஆவலா? 

முடி உதித்தல் பிரச்சனை வராமல் இருக்க, ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)