நாம் வெறும் வயிற்றில் செய்கின்ற ஒரு சில செயல்கள் நமக்கு பல வித ஆபத்துகளை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக இந்த செயல்கள் ஒவ்வொரு உறுப்புகளையும்👩 பாதிக்க செய்து மரணத்தை கூட ஏற்படுத்தும். நாம் வெறும் வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் அறிந்து கொள்வோம்.
கணவனிடம் மனைவி எதிர் பார்ப்பது என்ன?
செய்ய கூடாது?
காலையில் எழுந்தவுடன் நாம் எதையும் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் பல வித செயல்கள் நம்மை அறியாமலே செய்வோம்.
இவை எந்த வித பாதிப்பை நமக்கு தரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும்.
டீ? காபி?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது.
ஆனால், வெறும் வயிற்றில் இவற்றை குடித்தால், அமில தன்மை வயிற்றில் அதிகரித்து செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், வாந்தி ஆகிய பின்விளைவுகள் ஏற்படும்.
பெண்கள் அதிகமாக பேச காரணம் என்ன?
புற்றுநோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் கீமோ தெரபி நாம் கொடுக்கும் போது சிகிச்சை பலன் தராது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால், ஹீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாதவாறு தடுத்து நிறுத்துகிறது.
எனவே, இதற்கு பதிலாக டீ அல்லது காபியுடன் ஏதேனும் சேர்த்து சாப்பிடுவது சற்று நல்லது.
குடல் பிரச்சினை
உணவை ஆற்றலாக மாற்றவும், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் என பல முக்கிய பணிகளைச் குடல் செய்கிறது. மேலும் இவை உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு முக்கியமானது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குடலில் பிரச்சனை உள்ளது என சில அறிகுறிகளை வைத்து கண்டுப்பிடிக்க முடியும். வெறும் வயிற்றில் இந்த செயலை நிச்சயம் செய்ய கூடாது.
கொசுக்கள் பற்றி தெரிந்ததும் தெரியாததும் !
அதாவது, சோடாக்கள் நிறைந்த பானங்களையோ, உணவுகளையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், குடல் பகுதியில் அதிக எரிச்சல், வாந்தி ஏற்படுத்தும் தன்மை ஏற்படும்.
பல நாட்கள் இது தொடர்ந்தால் குடல் புண், உடல் எடை கூடுதல், பசியின்மை போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் செய்வதால் உடல் எடை சட்டென குறைந்து விடும் என பலர் எண்ணுகின்றனர்.
ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்த பயிற்சி கொழுப்புகளை குறைக்காமல் தசைகளையே குறைக்கும்.
எப்படி புயலுக்கு பெயர் வைக்கப் படுகிறது ?
உடற்பயிற்சிகளின் போது, மூளை உற்பத்தி செய்யும் நரம்புகளை தூண்டும் சில ரசாயனங்கள், வலி மற்றும் மனச்சோர்வு உணர்வை தற்காலிகமாக நிறுத்துவதும் தெரிய வந்துள்ளது.
ஆதலால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாமல் ஏதேனும் சிறிய அளவில் சாப்பிட்டு விட்டு பயிற்சியை தொடங்குங்கள்.
சுவிங்கம்
பலருக்கு ஜீவிங்கம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனை மற்ற நேரத்தில் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்பை விட, வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் தான் அதிகம்.
வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் வாயு கோளாறு, அமில தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றான வர தொடங்கும்.
காரசார உணவு
காலையில் எழுந்ததும் உணவின் மீது உள்ள காதலால் காரசாரமான உணவுகளை சாப்பிடாதீர்கள்.
காலை உணவில் காரசாரமான உணவுகளை சாப்பிட்டால் வயிற்றில் அமில தன்மை அதிகரிக்க கூடும். பிறகு குடல் புண்கள்✋ ஏற்பட்டு அதிக வலியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாத்திரை
நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச் சத்துகளுக்காகவும் கூட மாத்திரைகள் பயன்படுகின்றன. மாத்திரைகள், வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகின்றன.
நீங்கள் வெறும் வயிற்றில் பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது. இவ்வாறு செய்வதால் இவற்றின் வீரியம் அதிகரிக்க கூடும்.
இவை மலத்தில் ரத்த போக்கை ஏற்படுத்தி பல வித பாதிப்புகளை தருமாம். ஆதலால், மாத்திரைகளை👍 வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளாதீர்கள்.
மது அருந்தும் பழக்கம்
நவீன நாகரீகம் என்கிற பெயரில் இந்த செயலை பலர் செய்து வருகின்றனர். அதாவது, காலையில்👋 எழுந்ததும் வெறும் வயிற்றில் மது அருந்தும் பழக்கம் இப்போதெல்லாம் பரவலாக எல்லோரிடமும் தொற்றி வருகின்ற ஒரு கலாச்சாரமாக உள்ளது.
ஆனால், வெறும் வயிற்றில் மது அருந்தினால் கல்லீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் சிதைவடையும்.
சிட்ரஸ் பழங்கள்
மேற்சொன்ன பழக்க வழக்கங்களை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் செய்யாதீர்கள்💀. மீறி செய்தால் இவை உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
மேலும், வாழைப்பழம், தக்காளி, சிட்ரஸ் பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவற்றையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே.