தலைமுடியில் படியும் அழுக்கு மற்றும் நச்சுக்களை நீக்க எப்சம் உப்பு !





தலைமுடியில் படியும் அழுக்கு மற்றும் நச்சுக்களை நீக்க எப்சம் உப்பு !

0

இந்த உப்பு நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு இல்லை. 

எப்சம் உப்பு என்பது என்ன?
இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவையாகும். இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்ட உப்பு இது என்பதால் "எப்சம்" உப்பு என்று அழைக்கப்படுகிறது.

இந்த எப்சம் உப்பின் பல்வேறு ஆரோக்கிய பயன்பாடுகளை இந்த பதிவில் காண்போம்..

வறண்ட உதடுகள்

வறண்ட உதடுகள்

ஒரு டீஸ்பூன் எப்சம் உப்பை  பெட்ரோலியம் ஜெல்லியில் கலந்து கொள்ள வேண்டும். இதை உதட்டில் தடவி வந்தால், உதடு மென்மையாக மாறும். வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும். 

கால் வலி குணமாக:-

கால் வலி குணமாக:-

கால் வலியால் அதிகம் அவஸ்த்தைப்படுபவர்கள் தங்கள் முழங்கால் முழுவதும் முழுகும் அளவிற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் வெது வெதுப்பான நீரை நிரப்புங்கள். 

பின் அந்த நீரில் சிறிதளவு எப்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். பின் தங்கள் கால்களை அந்த நீரில் சிறிது நேரம் வைக்க வேண்டும். 

சுன்னத என்பதன் அறிவியல் காரணம் தெரியுமா? உங்களுக்கு... ! 

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதினால் கணுக்கால் வலி முழுவதும் சரியாகி விடும். அதே போல் இந்த வைத்தியம் தலைவலிக்கு ஒரு சிறந்த மருந்தாகும். 

இந்த ஆரோக்கிய குறிப்பை தொடர்ந்து செய்து வருவதினால் உடலில் உள்ள நரம்புகளுக்கு புத்துணர்ச்சிக் கிடைக்கும் இதனால் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பு

தலை முடியில் உள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை ஆரோக்கியமான முறையில் நீக்க வேண்டுமென்றால், 

தாங்கள் தலை முடிக்கு பயன்படுத்தும் ஹேர் கண்டிஷனரில் சிறிதளவு எப்சம் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். 

பின் தலைமுடிக்கு பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வதினால் தலை முடியில் படியும் அழுக்கு மற்றும் நச்சுக்களை மிக எளிமையாக நீக்கி விடலாம். இந்த முறையை பயன்படுத்துவதினால் கூந்தல் ஆரோக்கியமாக வளரும்.

தேனீக் கடி

தேனீக் கடி

தேனீக் கடி, கொசுக் கடி போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்தை எப்சம் உப்பு குறைக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பை ஒரு கப் குளிர்ந்த நீரில் கலக்க வேண்டும். 

பூனை தன் கழிவுகளை புதைக்கும் பழக்கம் எப்படி உருவானது?

இந்தக் கரைசலில் ஒரு பருத்தித் துணியை ஊற வைத்து அதைத் தேனீக் கடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிது நேரம் வைத்து ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறையும்.  

பாத்திரங்கள் பளபளக்க

பாத்திரங்கள் பளபளக்க

உங்கள் சமையலறையில் உள்ள பாத்திரங்கள் மிகவும் கரிப்படிந்தும், எண்ணெய் பிசுக்கு படிந்து காணப்படுகின்றதா? 

அந்த பாத்திரம் மீண்டும் பளபளக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள். 

அதாவது பாத்திரம் துலக்கும் சோப்புடன் சிறிதளவு எப்சம் உப்பை சேர்த்து பாத்திரங்களை துலக்குங்கள். 

இவ்வாறு செய்தால் தாங்களே வியந்துபோவீர்கள். அதாவது தாங்கள் கடையில் புதிதாக வாங்கிய பாத்திரங்கள் போல் பளபளக்கும்.

புற்கள் என்றும் பசுமையாக இருக்க:

புற்கள் என்றும் பசுமையாக இருக்க:

உங்கள் வீட்டு தோட்டத்தில் புற்கள் என்றும் நல்ல பசுமையாக இருக்க வேண்டுமா?  அப்படி என்றால் ஒரு பீப்பாய் (Barrel) முழுவதும் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். 

பின் அவற்றில் இரண்டு ஸ்பூன் எப்சம் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் இந்த நீரை புற்களின் மீது தெளிக்க வேண்டும். 

தோசை மொறு மொறுன்னு ஹோட்டல் தோசை போல வேண்டுமா?

இவ்வாறு புற்கள் மீது தெளிப்பதினால் புற்களுக்கு அதிகளவு இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் சத்து கிடைக்கும் இதனால் புற்கள் என்றும் பசுமையாக இருக்கும்.

 பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க

பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க

உங்கள் வீட்டு தோட்டத்தை பூச்சிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டுமா? அப்படி என்றால் இப்போதே சிறிதளவு எப்சன் உப்பை தங்கள் தோட்டத்தில் தெளித்து விடுங்கள். 

இதனால் தங்கள் வீட்டு தோட்டத்தை வண்டு, பூச்சிகள் மற்றும் புழுக்களின் தாக்குதல்களிடமிருந்து பாதுகாக்கலாம்.

கால் துர்நாற்றம்

கால் துர்நாற்றம்

கால்களில் ஏற்படும் துர்நாற்றங்கள் நீங்க ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி கொள்ளுங்கள். 

பின் அவற்றில் சிறிதளவு எப்சம் உப்பை கலந்து தங்கள் கால்களை நன்றாக 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 

இவ்வாறு உறவைப்பதினால் கால்களில் ஏற்படும் துர்நாற்றங்கள் அனைத்தும் நீங்கி கால்கள் மென்மையாக காணப்படும்.

விளைச்சலை அதிகரிக்க

விளைச்சலை அதிகரிக்க

எப்சம் உப்பு பற்றி நன்மைகள் குறித்த ஆராய்ச்சியில், இந்த உப்பு விளைச்சலை குறிப்பாக தக்காளி, மிளகாய் போன்றவற்றின் விளைச்சலை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. 

தண்ணீரில் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து கலந்து செடிகளில் சமமாக அந்த நீரைத் தெளிப்பதால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது.

சுளுக்கு

சுளுக்கு

எதிர்பாராமல் ஏற்படும் காயங்கள் மற்றும் சுழுக்குகள் சரியாக எப்சம் உப்பு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. 
ஆம் காயங்கள் மற்றும் சுழுக்குகள் சரியாக வெது வெதுப்பான நீரில் இரண்டு கப் எப்சம் உப்பை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்த நீரில், பாதிக்கபட்ட இடத்தை ஊற வைக்கவும். 

இரண்டாக பிளவுபட்ட இடத்தை எப்சம் உப்புக் கலந்த நீரில் ஊற வைக்கும் பொழுது அந்த பிளவு மறைய ஆரம்பிக்கும்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

எப்சம் உப்பின் பக்க விளைவுகள் அபாயத்தை தோற்றுவிக்கும் தன்மை கொண்டது. அதனால் தேவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு, தீவிர வயிற்றுப்போக்கு, உயர் கால்சியம் அளவு, சோர்வு, தசை வலிப்பு, தசைசுரிப்பு அல்லது 

கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) செய்வது

தசை வலி, ஒழுங்கற்ற கண் செயல்பாடு போன்றவை எப்சம் உப்பின் பக்க விளைவால் உண்டாகும் சில பாதிப்புகளாகும். 

எப்சம் உப்பை உடலின் வெளிப்புறம் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும், இதனை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)