கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இதை கஸ்தூரி மேத்தி என்றும் சொல்வார்கள். கஸ்தூரி மேத்தி டிரையா எல்லா கடையிலும் கிடைக்கும்.
பிரா பெண்கள் அறிய வேண்டிய உண்மைகள் !
நல்ல மணமாக ரொம்ப நல்ல இருக்கும்,. வெந்த கீரை கிடைக்காதவர்கள். இப்படி இதை வாங்கி மேத்தி ரொட்டி, மேத்தி தால், ஆலு மேத்தி என வித வித மா செய்யலாம்.
இது வட இந்தியர்களின் சமையல் அறையில் பிரசித்தி பெற்ற ஒரு பொருள். அவர்கள் எல்லா கறிக்கும் இந்த கசூரி மேத்தியை உபயோகப்படுத்துவார்கள்.
தேவையான பொருட்கள்
2 கட்டு வெந்தய கீரை
ஸ்டோரேஜ் பாட்டில்
செய்முறை :
வெந்தய கீரையில் உள்ள இலைகளை மட்டும், பிரித்து நன்கு தண்ணீரில் கழுவி, உடனே ஒரு துணியில் போட்டு நன்கு ஈரம் போகும் படி, இரண்டு, மூன்று முறை மாற்றி விட்டு, எடுத்து இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்தவும்.
கர்ப்பிணி பெண்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் !
இலைகளை கழுவியவுடன் துணியில் போடும் போதே பேன் காற்றின் அடியில் வைக்கவும்.
இரண்டு நாட்கள் நல்ல வெயிலில் காய்ந்து மொறு மொறுப்பாக வந்தவுடன் எடுத்து காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பக்குவமாக வைத்திருக்கலாம். என்னிடம் உள்ளது போன வருடம் தயார் செய்தது.
பன்னீர் பட்டர் மசாலா, ஆலு மேத்தி, மட்டர் பன்னீர், தால் மகனி, தம் ஆலு, பாலக் பன்னீர், ஆலு கேப்ஸிகம் போன்ற எல்லா நார்த் இந்தியன் கறிகளிலும் சேர்க்கலாம்.
நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க இதை பயன்படுத்துங்கள் !
குறிப்பு :
பிரஷ் வெந்தய கீரை எப்ப வேண்டுமானாலும் கிடைக்கும், வெந்தயத்தை ஒரு கைபிடி மண்ணில் வைத்து
சின்ன தொட்டியில் வைத்தால் இரண்டு முன்று நாளில் நல்ல வெந்த கீரை கிடைக்கும உடம்பிற்கு குளிர்த்தி, வாய் புண் வயிற்று புண்ணை அகற்றும்.