இந்தியா கலாச்சாரத்தில் மட்டுமின்றி, உணவுகளிலும் மிகவும் பிரபலமானது. இந்திய உணவுகளின் சுவைக்கு ஈடு இணை, இவ்வுலகில் வேறு எந்த ஒரு உணவும் இல்லை என்று சொல்லலாம்.
அதிலும் சைவ, அசைவ உணவுகளில் மட்டுமின்றி, இனிப்புக்களிலும் சிறந்ததாக உள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான இனிப்புக்கள் பிரபலமானதாக இருக்கும்.
அதில் ஒரு வகை தான் இந்த லவங்க லதிகா. இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்..
தேவையான பொருள்கள் :
மைதா மாவு - 3/4 கப்
சீனி - அரை கப்டால்டா - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் எசன்ஸ் - 2 துளிகள்
எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை :
கசூரி மேத்தி தயார் செய்வது எப்படி?
பிசைந்து வைத்திருக்கும் மாவை நீளவாக்கில் தேய்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டை ஒன்றை எடுத்து அப்பளம் அளவிற்கு தீட்டவும்.
அதில் மேல் பக்கத்தையும் கீழ்பக்கத்தையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து உள்பக்கமாக மடக்கவும்.
அதை அப்படியே மற்றொரு பக்கம் திருப்பி வலது பக்கத்தையும் இடது பக்கத்தையும் இணைத்து நடுவில் கிராம்பை குத்தி வைக்கவும். இதேப் போல் மற்ற உருண்டைகளிலும் செய்து வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் சீனியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய் எசன்ஸ், கலர் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
அதில் பொரித்து வைத்திருக்கும் பிஸ்கெட்டுகளை போட்டு மேலே பாகை ஊற்றி சிறிது நேரம் வைக்கவும்.
நம் இந்தியாவை பற்றி நாம் அறிந்திராத முக்கியமான தகவல்கள் !
பாகு லத்திகாவுடன் சேர்ந்து நன்கு ஊற வேண்டும். அப்போது தான் சுவையாக இருக்கும். லவங்க லதிகா தயார்.