ஈசி பப்ஸ் மற்றும் பேஸ்ட்ரி செய்வது எப்படி?





ஈசி பப்ஸ் மற்றும் பேஸ்ட்ரி செய்வது எப்படி?

0

கீரைகளை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி பப்ஸ் செய்து கொடுக்கும் போது அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது ஒரு ஆரோக்கியமான ரெசிபி ஆகும்.

ஈசி பப்ஸ் மற்றும் பேஸ்ட்ரி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:

சக்கரை வள்ளி கிழங்கு – 2

வெஜிடபிள் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 2 (நைசாக நறுக்கி கொள்ளவும்)

இஞ்சி – 1 துண்டு (துறிவியது)

பூண்டு – 2 பல் (நசுக்கியது)

சிவப்பு பச்சை மிளகாய் – 2 (நைசாக நறுக்கி கொள்ளவும்)

கொத்தமல்லி இலை – ஒரு கொத்து (நைசாக நறுக்கி கொள்ளவும்)

கறி பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

கருப்பு எள் – 2 டேபிள் ஸ்பூன்

கீரை – 2 கப்

பிலோ பாஸ்ட்ரி சீட் – 6 சீட்டுகள்

வெள்ளரிக்காய் – 1/2 கப்

இயற்கையான யோகார்ட் – 1 கப்

மாங்காய் சட்னி – பரிமாறுவதற்கு

செய்முறை

சர்க்கரை வள்ளிக் கிழங்கை ஒரு பெளலில் எடுத்து கிளிங் பிலிம் கொண்டு கவர் செய்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து 8 நிமிடங்கள் அதாவது மென்மையாகும் வரை வேக வைக்கவும். 

அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.

பின்பு அதனுடன் இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை சில நிமிடங்கள் வதக்கவும். 

பின்பு அதனுடன் கறி பேஸ்ட் மற்றும் கருப்பு எள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை 30 நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் கீரை மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.

கீரை நன்கு மசியும் வரை வேக வைக்கவும். பின்பு அவற்றில் வேக வைத்துள்ள சக்கரை வள்ளி கிழங்கை சேர்க்கவும். கிழங்கை வேக வைத்த தண்ணீரையும் சிறிதளவு சேர்த்து கொள்ளவும். 

மஸ்கட் திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா? 

இப்பொழுது ஒரு கரண்டியை எடுத்து அதன் பின் பகுதியை கொண்டு எல்லாவற்றையும் நன்றாக மசிக்கவும். ஒரு சில கிழங்கு துண்டுகளை விட்டு விடவும். பின்பு ஆற வைக்கவும்.

பாஸ்ட்ரி தயாரிக்கும் முறை:

ஈசி பப்ஸ் மற்றும் பேஸ்ட்ரி செய்வது எப்படி?

பாஸ்ட்ரி செய்வதற்கு மைதா மாவை பிசைந்து கொள்ளவும். அதில் இருந்து சிறிதளவு மாவை எடுத்து கொண்டு இரண்டு சதுர வடிவ சீட் மாதிரி தேய்த்து கொள்ளவும். 

நம் எலும்புகளை காத்திட கீரை ஜூஸ் குடிங்க !

அல்லது ரெடிமேட் ஸ்பிரிங் ரோல் சீட் வாங்கியும் பயன்படுத்தலாம். மீதுள்ள மாவு கலவை காயாமல் இருக்க ஒரு டீ டவலை கொண்டு மூடிக் கொள்ளவும்.

இப்பொழுது இரண்டு சீட்களிலும் எண்ணெயை தடவி கொள்ளவும். ஒரு சீட் மீது மட்டும் கருப்பு எள்ளை தூவி விடவும். மற்றொரு சீட்டை எள் தூவப்பட்டுள்ள சீட்டின் மீது வைக்கவும். 

குறைந்த பக்க பகுதி உங்களை நோக்கி இருக்குமாறு வைத்து கொள்ளவும். இப்பொழுது அதன் நடுவில் வெட்ட நமக்கு இரண்டு நீளமான துண்டுகள் கிடைக்கும்

பின்பு கிழங்கு கலவையை, சீட்டை முக்கோண வடிவில் செய்து அதனுள்  வலது பக்க மூலையில் வைக்கவும் முக்கோண வடிவில் மடக்கவும். 

மீதமுள்ள பாஸ்ட்ரி சீட்டின் பகுதியை கத்தியை கொண்டு வெட்டி விட வேண்டும். இதே மாதிரி ஆறு பப்ஸ்விற்கும் செய்ய வேண்டும்.

இப்பொழுது ஓவனில் 200 செல்சியஸ் /180 செல்சியஸ், ஃபேன் /கேஸ் 6 என்ற அளவீட்டில் வைத்து சமைக்க வேண்டும். இப்பொழுது பப்ஸ்யை பேக்கிங் ட்ரேயில் வைத்து சமைக்க வேண்டும். 

இன்னும் கொஞ்சம் எண்ணெய்யை அதன் மேல் ஊற்றி மீதமுள்ள கருப்பு எள்ளையும் அதன் மேல் தூவி விட வேண்டும்.

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் என்பது எப்படி செயல்படுகின்றன?

25-30 நிமிடங்கள் அதாவது பொன்னிறமாக மாறும் வரை வேக வைக்க வேண்டும். இப்பொழுது வெள்ளரிக்காயை தோலுரித்து ரிப்பன் போல் சீவ வேண்டும். 

பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழைகள் இவற்றை யெல்லாம் போட்டு பப்ஸ் பாஸ்ட்ரியை அலங்கரிக்கவும்.

பிறகு டோலாப் க்ரீம் மற்றும் யோகார்ட் போன்றவற்றை தட்டில் வைத்து பப்ஸ் மேல் வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழைகள் போட்டு மற்றும் மாங்காய் சட்னி போன்றவற்றுடன் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)