மலபார் சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?





மலபார் சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?

உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? வீட்டில் உள்ளோர் சிக்கன் ரோஸ்ட் செய்து கொடுக்க கேட்பார்களா? ஆனால் நீங்கள் செய்யும் சிக்கன் ரோஸ்ட் அவ்வளவு சுவையாக இருக்காதா? 
மலபார் சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?
அப்படியானால் கீழே கொடுக்கப் பட்டுள்ளவாறு சிக்கன் ரோஸ்ட் செய்யுங்கள். இந்த சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது ரசம் சாதம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும்.
விடுமுறை நாட்களில் வீட்டில் பொறுமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். 

குறிப்பாக இந்த சிக்கன் ரோஸ்ட் பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். 

இதை வீட்டில் நீங்கள் முயற்சித்தால், நல்ல பாராட்டைப் பெறலாம். சிக்கன் ரோஸ்ட் எப்படி எளிய முறையில் செய்வதென்று இதைப் படித்து செய்து சுவைத்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள்: 

சிக்கன் லெக் பீஸ் - 6 

வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) 

இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது) 

தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் 

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு சமையல் 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 

சிக்கன் ஊற வைப்பதற்கு... 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

சோள மாவு - 2 டீஸ்பூன் 

அரிசி மாவு - 2 டீஸ்பூன் 

மிளகு - 1 டீஸ்பூன் 

எலுமிச்சை - 1 

செய்முறை: 

முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும்.
பேஸ்மேக்கர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !
பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை வைத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.

பேஸ்மேக்கர் கருவியின் வகைகளும் செயல்படும் விதமும் !

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கவும். 

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி!
Tags: