பொங்கல் கொண்டாடும் விதம்:
இந்தப் பண்டிகை 4 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1. போகி பொங்கல்: பொங்கலுக்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் நமது பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும் விழா.
தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள் !
விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
2. சூரியப் பொங்கல்: சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். அதிகாலையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு, படையல் செய்வது வழக்கம்.
3. மாட்டுப் பொங்கல்: விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள்.
இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் வழங்கப்படும்.
4. காணும் பொங்கல்: காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர்.
இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.
நம்முடைய தமிழ்நாட்டில் இப்படி கொண்டாட வெளி மாநிலத்திலும், வெளி நாட்டிலும் எப்படி கொண்டாடுகிறார்கள் பார்க்கலாம்.
இலங்கை, மலேசியா, ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உணவுகள் !
`லோரித் திருநாள்’ என்ற பெயரில் பஞ்சாபியில் யாகங்கள் நடத்தி, பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் ஹோமோவா திருவிழா என்றும் முதல் பழங்கள் திருவிழா என் றும் கொண்டாடப்படுகிறது.
வட நாட்டில் போகிப்பண்டிகை போல், தீயில் அவல், இனிப்பு, பொரி இவைகளைப் போட்டு பொங்கல் விழாக் கொண்டாடப்படுகிறது.
கிரேக்க நாட்டில் ஸ்மோஸ் போரியா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் எனக் கொண்டாடப்படுகிறது.
மராட்டிய மாநிலத்தில் போகி, சங்கராந்தி, கிங்கராந்தி என மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் புனித விழாவாகக் கொண்டாடுவர். அன்று பட்டம் விட்டு மகிழ்வர்.
அசாம், மணிப்பூரில் போகாலி பிகு’ என்ற பெயரில் அறுவடைத் திருநாளாக கொண்டாடப் படுகிறது காஷ்மீரில் “கிச்சரி அமாவாசை’ என்ற பெயரில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஆப்பிரிக்க மக்கள் ‘கவான்ஸ்கர்’ என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாடுகின்றனர்.
ஜப்பான் நாட்டில் ‘குதிரைக்குப் பொங்கல்’ வைத்து அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப் படுகிறது. ‘கங்கா சாகர் மேளா’ என்ற பெயரில் மேற்கு வங்காளத்தில் பொங்கல் கொண்டாடப் படுகிறது.
மருந்தாகும் உணவு வகைகள்… சில டிப்ஸ்... !
கனடா, அமெரிக்காவில் ‘தாங்க்ஸ் கில்லிங்டே’ என்ற பெயரில், இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.