டயட் பற்றி தெரிந்து கொள்ள படியுங்கள் !





டயட் பற்றி தெரிந்து கொள்ள படியுங்கள் !

0

உடல்எடை குறைப்பது போன்ற சமாசாரங்களெல்லாம் ஒரு வாரத்திலோ, ஒரு நாளிலோ முடியக் கூடியதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி நிச்சயம் வேண்டும்

திடீரென முப்பது நாளில் இளைக்க நினைத்தால் உடலின் ஆரோக்கியமும் பாழாகும். இழந்த எடை விரைவிலேயே ஏறவும் செய் யும்.

நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் சில உணவுப் பழக்கங்களை வைத்திருப்ப தாக பேட்டிய ளிப்பார்கள். அவற்றைக் கடைபிடித் தால் அவர்களைப் போல நாமும் ஆகி விடலாம் எனும் கனவு சிலரிடம் சுழற்றியடிக்கும். 

அதெல்லாம் வெறும் ‘மாயா… மாயா’ தான். அந்த சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். அப்படி உங்களுக்கு ஏதேனும் தேவையெனில் ஒரு நல்ல டயட்டீஷியனைப் பார்ப்பதே நல்லது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஒன்றில் நிலைத்திருங்கள். இடையிடையே பிஸ்கட் சாப்பிடுவது, சிறு சாக்லேட் சாப்பிடுவது, ஒரு பீஸ்கேக் சாப்பிடுவ தெல்லாம் கலோரிக் கணக்கில் சேரும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 

ஒரு சின்ன முறுக்கு சாப்பிட்டாலே நீங்கள் சுமார் 180 👋கலோரியை உடலில் ஏற்றிக் கொள்கிறீர்கள். வெறும் டயட் இருந்தால் போதும் என நினைப்பதே தப்பு. கூடவே, தொடர்ந்த உடற்பயிற்சி நிச்சயம் வேண்டும். 
வெறும் டயட் இருந்தால் போதும்

அதற்கென நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வேலையிலே யே உடற் பயிற்சியைப் பாகமாக்கிக் கொள்ள வேண்டும். 

பஸ்ஸில் ஒரு ஸ்டாப்பிங் முன்னாடியே இறங்கி நடப்பது, லிஃப்ட் பக்கமே போகாமல் படியை நாடுவது, அடிக்கடி எழுந்து ஒரு நடை போடுவது… இப்படி!

அவ்வப்போது ஒரு வேளை சாப்பாட்டை👋 தவிர்த்து விட்டு ஓடினால், இன்னும் கொஞ்சம் எடை குறையலாம் என்பது தப்பான எண்ணம். உண்மையில் அது உடல் எடையை அதிகரிக்கவே தூண்டும். 

காரணம், ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். உடனே, உடல் இனிப்புப் பொருளைத் தேடும். கடை சியில், அன்று அதிக கலோரி உட்கொண்ட நாளாக மாறிவிடும்.

சிக்கனில் கொழுப்பு கம்மி என பலரும் நினைப்பதுண்டு. தோல் இல்லாத சிக்கன்👍 சாப்பிட்டால் தான் அந்தக் கணக்கு சரிவரும். சிக்கனின் தோலில் இறைச்சியைவிட மூன்று மடங்கு அதிக கொழுப்பு உண்டு… கவனம்.
டயட் பற்றி

டயட் இருப்பவர்கள் மறந்து விடும் சமாசாரங்களில் ஒன்று… டிரிங்க்ஸ். அவ்வப் போது ஒரு ‘சிப்’ ஜூஸ்👋 குடித்தாலோ, ஒரு குளிர்பானம் குடித்தாலோ அதுவும் கணக்கில் சேரும் என்பதை அம் மணிகள் கணக்கில் கொள்ள வேண்டியது முக்கியம்.

வீட்டுப் பெண்களின் முக் கியமான பழக்கம் இது. என்னதான் டயட் இருந்தாலும், இறுதியில் சமைத்த உணவு வீணாகப் போகிறதே என்பதற்காக மிச்சம் மீதியை எல்லாம் உள்ளே தள்ளுவார்கள். அது உடலை உப்ப செய்யும்… ஜாக்கிரதை.

பெண்கள்👋 ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு டீஸ்பூன் சீனி பயன்படுத் தலாம். காபி, டீ அடிக்கடி குடித்தால், இந்த அளவும் அதிகரிக்கும் என்ப தால் அவற்றைத் தவிர்த்து விட வேண்டும். 

கூடவே காபியில் உள்ள ‘கெஃ பீன்’, இதயத் துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)