ஒரு உண்மை தெரியுமா? நல்ல ஆரோக் கியமான உணவை, சரியான அளவில் உண்டால் மனம் ரொம்பவே மகிழ்ச்சியாகி விடும்.
தலைகீழாகி விட்டால் மன அழுத்தம், உடல் சோர்வு என இல்லாத தலைவலி எல்லாம் வந்து சேரும். எனவே ‘உண்பதைத் திருந்த உண்’ என்பதை மனதில் கொள்ளுங்கள்.
தினமும் தானியங்கள், பழங்கள், காய் கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். பால், அசைவம் போன்றவற்றை கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.
சர்க்கரை, எண்ணெய் போன்றவை மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும். இதையே ‘பேலன்ஸ்ட் டயட்’ என்பார்கள்.
👋வைட்டமின்-பி குறைவாக இருந்தால் ரொம்பவே ‘கடுப்பாக’ உணர்வீர்கள். வைட்டமின் பி 6, மூளையில் ‘செரோடோனின்’ சுரக்க வழி செய் கிறது.
செரோடோனின் இருந்தால் தான் உங்கள் மனம் உற்சாகமாகும். அதற்கு நிறைய மீன், முட்டை, வாழைப்பழம், சோயா போன்றவை பயனளிக்கும்.
👋வைட்டமின்-சி குறைந்தால் சோர்வாக உணர்வீர்கள். சிட்ரஸ் அதிகமுள்ள பழங்கள், கொய்யா, திராட்சை, கிவிப் பழங்கள் இவை யெல்லாம் வைட்டமின்-சி யின் உறைவிடங்கள்.
பெரும்பாலும் காய்கறிகள், பழங்களை அப்படியே சாப்பிட்டால் உடலும் உள்ளமும் உற்சாகம் கொள்ளும்.
தினமும் இரண்டு வாழைப்பழங்கள், மீன், கொஞ்சம் பச்சை மிளகாய், குடமிளகாய்… உணவில் இவையெ ல்லாம் இருந்தால் உற்சாகமாக உணர்வீர்கள்.
குறிப்பாக பச்சை மிளகாயிலுள்ள காரம் ‘எண்டோர்பின்’கள் சுரப்பதற்கு உதவும். எண்டோர்பின்கள் சுரக்கும் போது மனம் ஆனந்தத்தில் மிதக்கும்.
உற்சாகமாக இருக்க வேண்டுமென்றால் சிலவற்றைத் தவிர்ப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியம். குறிப்பாக, புகை, மது, அடிக்கடி காபி போன்றவை.
இவை உடலிலுள்ள சத்துகளை👋 எல்லாம் உறிஞ்சி விடுகின்றன. சிகரெட் உடலிலுள்ள வைட்டமின் சி-க்கு வேட்டு வைக்கிறது. இது மனதின் உற்சாகத்தைக் குலைக்கும்.
‘ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பிடணும், மூக்குப் பிடிக்க சாப்பிடணும்’ எனும் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஐந்து வேளை சாப்பிடுவது நல்லது.
இது உடலின் சர்க்கரை👋 அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும். அதே போல உடலின் உறுப்புகளையும் அதிகம் வேலை வாங்காமல் இருக்கும். மனமும் உற்சாகமாக இருக்கும்.
உடலில் தண்ணீர்👋 சத்து தேவையான அளவு இல்லா விட்டால் கூட உடல் உற்சாகம் இழக்கும் என்பது வியப்பூட்டும் செய்தி.
ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ‘மடக் மடக்’ என குடிக்காமல், கொஞ்சம் கொஞ் சமாக நாள் முழுவதும் குடிப்பது ரொம்ப நல்லது.