தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணி.. 40 ஆயிரம் அபராதம் !





தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணி.. 40 ஆயிரம் அபராதம் !

0

தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணியை தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஹோட்டல் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது.

தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பனுக்கு ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள சில ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணி மற்றும் 

பிற உணவு வகைகள் தரமற்றதாக பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது என பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பனுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்தப் புகாரின் பேரில் அவர் சம்மந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சென்று நேரில் திடீரென சோதனை செய்துள்ளார். 

இதனை அடுத்து ஒரு ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் பிரியாணியின் மாதிரியை எடுத்து உணவு பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சிக் கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

அந்த சோதனையில் பிரியாணி உணவு மாதிரி தரம் குறைந்ததாகவும், சுகாதாரமற்ற முறையில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இதனை யடுத்து சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு தொடருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அதன்படி ஹோட்டல் உரிமையாளர் மீது ஓசூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

வெள்ளையை விட கருப்பு அரிசியே நல்லது ஏன் தெரியுமா?

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணியை தயாரித்து பொது மக்களுக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக 

ஹோட்டல் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஒரு நாள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)