மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள்.
தென்மாவட்டமான கேரளா, கர்நாடகா, ஆந்திர மக்கள் மத்தி மீனை விரும்பி உண்பார்கள். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் தான் மத்தி மீன் காணப்படும்.
மத்தி மீன் தான் கடலூர் மாவட்ட மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது. ஆண்டு தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது.
விலையும் மிக மலிவாக ரூ.75 முதல் ரூ.100 -க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
அனைத்து வீடுகளிலும் ஞாயிறு கிழமை அசைவ உணவு சமைத்து சாப்பிடுபவர்கள். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் விலை குறைந்த சத்து நிறைந்த மத்தி மீன்னை வங்கி சமைப்பார்கள்.
இதன் விலையும் குறைவு தான். சில ஆண்டுகளுக்கு முன் 20 ரூபாய் இருந்து மத்தி மீன் (Mathi Meen) கிடைத்தாது.
மத்தி மீனின் பயன்கள்
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது.
மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
மேலும் தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.
மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
வாரம் இருமுறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?
சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மத்தி மீன் (Mathi Meen) சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் கால்சியம் சத்து நாம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் நன்கு உதவுகிறது.
மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 நாம் உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவை கட்டுபடுத்தி இதய பாதிப்பில் இருந்து நம்மை காப்பற்றி இதயம் பலப்பட உதவும்.
உடல் வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த சைவ உணவுகள் !
மத்தி மீனில் அயோடின் கலந்த தாதுச்சத்து உள்ளதால் அதை நாம் உணவில் சேந்த்து சாப்பிட்டு வந்தால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மத்திமீனை (Mathi Meen) உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் குறைபாடு நீங்கி பார்வை திறன் அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழம் கோதுமை தோசை செய்வது எப்படி?
உடற்பயிற்சி செய்பவர்கள் டயட்டில் உள்ளவர்கள் வாரம் இரு முறை மத்தி மீனை உணவில் சேர்த்து கொண்டால் நாம் உடலை கட்டு கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.