வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போ ஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
கிறிஸதுமஸ் பண்டிகைக்கு வீட்டிலேயே கேக் செய்ய ஒரு வித்தியாசமான அதே சமயம் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பிரட் ரெசிபியை செய்யலாம்.
அது தான் கேரட் வால்நட் பிரட் ரெசிபி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமாக இருக்கும்.
முக்கியமாக இது பண்டிகைக் காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களில் மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஏற்ற ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட.
நுங்கு சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் !
முட்டை - 2
சர்க்கரை - 200 கிராம்
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
மைதா - 1 1/2 கப்
துருவிய கேரட் - 1 1/2 கப்
வால்நட்ஸ்👈 - 1/2 கப்
வெஜிடேபிள் ஆயில் - 160 மிலி
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்பின்பு ஒரு பௌலில் 👉சர்க்கரை, எண்ணெய், வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒரு சேர கலந்து விட வேண்டும்.
பிறகு மற்றொரு பௌலில் மைதா, பட்டை தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் இந்த மைதா கலவையை முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு கரண்டி கொண்டு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் துருவிய கேரட், வால்நட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியில் ஓவனில் உள்ள பேனை வெளியே எடுத்து 15 நிமிடம் குளிர வைத்து, பின் கத்தியால் துண்டுகளாக்கினால், சிம்பிளான கேரட் வால்நட் பிரட் தயார்.