செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது எப்படி? #Poriyal





செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது எப்படி? #Poriyal

0

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன் வைக்கப்பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கிறது. 

செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது

பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.    

ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும். நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. 

மூலநோய் வெளிக்காட்டும் அறிகுறிகள் !

இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக  மாற்றுகிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. 

லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.  

நீங்கள் மதிய வேளையில் மிகவும் எளிமையான பொரியல் செய்ய விரும்பினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியலை செய்யலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பீன்ஸில் சத்துக்கள் அதிகம் உள்ளது. 

ஒருவர் அடிக்கடி உணவில் பீன்ஸ் சேர்த்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம். உங்கள் வீட்டில் உள்ளோர் பீன்ஸ் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு அதை முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுங்கள்.

விக்கல் நிறுத்த செய்ய வேண்டியது !

தேவையான பொருட்கள்:

முட்டை - 6

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 2 டீஸ்பூன்

சீரக விதைகள் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு அதில் பீன்ஸ் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வேகும் வரை வதக்கவும். அதற்குள் மிளு மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

பிறகு அரைத்த பொடியை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து, அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.
கைநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?

முட்டை நன்கு வெந்ததும், அதன் மேல் கொத்த மல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் தயார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)