இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் ஒன்றாக கரும்பு இருக்கிறது. கரும்பு தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும்.
இன்று உலகின் பெரும்பாலான கண்டங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது.
அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலமாகவே நீங்கள் அந்த பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான முழுமையான சக்தியை பெறலாம்.
மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் கரும்பில் நினைத்து இருக்கிறது.
இந்த கரும்பை நன்றாகப் பிழிந்து சாறெடுக்கடப்பட்ட கரும்பு ஜூஸ் மக்களால் அதிகம் விரும்பி அருந்தப்படுகிறது.
இது தொற்று நோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது.
இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மற்றும் இது உடலின் புரத அளவுகளை அதிகரிக்கும் போது காய்ச்சலைக் கையாளுகிறது.
அந்தக் கரும்பு ஜூஸ் அதிகம் அருந்துவதால் மனிதர்களின் உடலுக்கு ஏற்படக் கூடிய மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தோல் பளபளப்பு
வயதான முக தோற்றம் ஏற்படுவதை விரும்புபவர்கள் யாருமே இல்லை. வயது ஏற, ஏற உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சி குறைந்து, முதுமைத் தோற்றம் ஏற்படவே செய்வதை தடுக்க முடியாது.
எப்போதும் இளமை தோற்றத்துடன் இருக்க விரும்புபவர்கள் கரும்பு ஜூஸ் பருகுவது சிறந்த பலன்களைத் தருகிறது.
இதிலிருக்கும் ஆன்ட்டி – ஆக்ஸிடென்ட்ஸ், பிளேவனாயிட்ஸ், பினோலிக் கூட்டுப் பொருட்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தன்மையை கூட்டுகிறது.
தோலில் ஒரு பளபளப்பு தன்மையை கொடுத்து உடலுக்கு இளமைத் தோற்றத்தைத் தருகிறது. நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்கலாம்.
சிறுநீரக தொற்றுகள்
சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
நச்சுக்களை நீக்குகிறது
கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது.
செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கணவரை கொலை செய்தேன்... பவானி !
உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
உடனடி ஆற்றல்
கரும்பு சாறு என்பது உடனடி ஆற்றலிற்கு ஒரு சிறந்த ஆதாரமாகும். தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கிறது.
நோய் எதிர்ப்பு திறன்
நமது உடலில் மற்ற விடயங்கள் போன்று நோய் எதிர்ப்பு சக்தி மிக வலுவாக இருப்பது அவசியம். கரும்புச்சாறு பருகுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெறுகிறது.
இதில் நிறைந்திருக்கும் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் கலந்து நிணநீர் சுரப்பிகளில் வெளிப்படுத்தி, உடலை எளிதில் தாக்கக்கூடிய தொற்று வியாதிகள், சுரங்கள் போன்றவற்றை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
உங்களின் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள !
மேலும் நமது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. அந்த உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கச் செய்கிறது.
கல்லீரல் சுரக்கின்ற பைலிரூபின் வேதிப்பொருளின் சமசீர் தன்மையை காக்கிறது.
தொண்டை புண்
உங்கள் தொண்டைக்குள் திடீர் அரிப்பு அல்லது எரிச்சலை நீங்கள் உணர்ந்தால், கரும்பு சாற்றை ஒரு குவளையும் சுண்ணாம்பு மற்றும் கருப்பு உப்பு ஒரு குவளையுடன் குடிக்க வேண்டும்.
வைட்டமின் சி மிகுதியாக கரும்பு சாறுகளில் காணப்படுகிறது, இது தொண்டை புண் குணமாக உதவுகிறது.
கரும்பு சாறு என்பது வைரஸ்கள் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப் பொருட்களின் ஒரு வளமான மூலமாகும்.
எடை குறைப்பு
இது இனிப்பு என்றாலும், கரும்பு சாறு ஒரு சில கூடுதல் கிலோவை எடுப்பதற்கு உதவுகிறது. கரும்பு சாறு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக அறியப்படுகிறது,
இது எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம். நம் எடையை நிர்வகிக்க உதவும் வகையில் இதுவும் ஒன்றாகும்.
செரிமான திறன் மேம்பட
பலருக்கும் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் அடையாமல் போக காரணம் செரிமான அமிலங்களின் சுரப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் குறைபாடுகள் ஆகும்.
கரும்பு ஜூஸ் அடிக்கடி பருகுபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சுத்தமாகிறது. மேலும் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சுரப்பை அதிகப்படுத்தும்.
அதன் வேதியியல் சமச்சீர் தன்மையையும் சரியான விகிதத்தில் வைக்கிறது. எனவே செரிமானத் திறன் மேம்பட விரும்புவார்கள் தினமும் ஒரு வேளை கரும்பு ஜூஸ் அருந்துவது நல்லது.
கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன்செய்ய உதவுகிறது, மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது.
பற்களுக்கு வலிமை
பொதுவாகவே பற்களில் சொத்தை ஏற்பட்டவர்கள், சுகாதாரத்தை முறையாக பேணாதவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் இந்த வாய் துர்நாற்றம் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு சிறந்த இயற்கை தீர்வாக கரும்பு ஜூஸ் இருக்கிறது.
கரும்பு பயிரில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது. சிலருக்கு பற்கள் வலிமை இழந்து காணப்படும்.
பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும். இவர்கள் கரும்பு சாப்பிடுவதால் பற்கள், ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் தடுக்கிறது.
இதயம்
தினமும் இரண்டு முறை மலம் கழிக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லாதவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க? எப்போது என்ன சாப்பிடலாம்?
இந்த கரும்பு சாறு அருந்துவதன் மூலம், இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.
கரும்பின் வேர்
கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம்.
உடல் எரிச்சல்
உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். இதற்கு கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யலாம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
மூளைக்கு
உடலில் அனைத்து இயக்கங்களையும் மூளை தான் நிர்வகிக்கிறது. இந்த கரும்புச் சாறை அருந்துவதன் மூலமாக மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.
புண்கள் ஆற
குழந்தைகளுக்கு அடிக்கடி விளையாடும் போது கீழே விழுவதன் காரணமாக புண்கள் உண்டாகும்.
எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் நிறைந்த உணவு !
இதற்கு கரும்பை நசுக்கி புண் இருக்கும் இடங்களில் கட்டி வைப்பதன் மூலம் விரைவில் குணமாக்கலாம்.