முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
மிளகுத் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவுகுழம்பிற்கு...
வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மல்லித் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
ஏலக்காய் - 3
செய்முறை:
பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி ஒரு நிமிடம் கழித்து, அப்படியே ரோல் போன்று சுருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதை சிறு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஜாரில் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை தூவி, பச்சை வாசனை போக வேக வைக்கவும்.
கருணைக்கிழங்கு கட்லெட் செய்வது
இறுதியில் அதில் ஆம்லெட் துண்டுகளைப் போட்டு கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முட்டை ஆட்லெட் குழம்பு தயார்.