பேசியல் செய்ய தேவையான பொருட்கள்.
வெந்தயப் பொடி – 1 ஸ்பூன்,
புளிக்காத தயிர் – 2 ஸ்பூன்,
எலுமிச்சை பழச்சாறு – 1/2 ஸ்பூன்,
ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்,
தேன் – 1 ஸ்பூன்,
கார்லிக் புரோட்டா செய்வது எப்படி?
செய்முறை :
உங்கள் வீட்டில் இருக்கும் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்த வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வெந்தய பொடி, தயிர், லெமன் ஜூஸ், ரோஸ் வாட்டர், தேன் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 2 ஓட்டு ஓட்டி கொள்ள வேண்டும்.
இது வழுவழுப்பான பேஸ்டாக நமக்கு கிடைத்து விடும். இதை ஒரு பவுலில் மாற்றிக் கொண்டு உங்களுடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவிக் கொள்ளுங்கள்.
முகம் தவிர கை கால்களிலும் இந்த பேக்கை போட்டுக் கொள்ளலாம்.
குறிப்பாக :
உணவை நுகர்ந்தாலே பசி தீருமா?
வறட்சியான சருமத்தில் அதிகப்படியான சுருக்கத்தை கொண்டவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக உதவியாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.