கீட்டோ டயட் (Ketogenic Diet) என்பது சமீப காலமாக பிரபலமாகி வரும் டயட் முறையாகும். பிரபலங்கள் முதல் நடுத்தர மக்கள் வரை தங்கள் எடையை குறைக்க இந்த கீட்டோ டயட்டை தான் பின்பற்றி வருகிறார்கள்.
சில வகை புற்று நோய்க்கும், அல்சைமர் மற்றும் வேறு நோய்களுக்கும் இந்த டயட் நல்ல நன்மையை தருவதாக ஆதாரங்கள் உள்ளது.
இந்த டயட்டில், ஒரு நாளில் கார்போ உட்கொள்ளல் அளவு 20-50கிராம் மட்டுமே. பல ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகள் இந்த டயட்டிற்குள் எளிதாக அடங்குகின்றன.
இது உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க பயன்படுகிறது. ஒரு கீட்டோ உணவில் 80% கொழுப்பு, 15% புரதம் மற்றும் கார்போ ஹைட்ரேட்டு களிலிருந்து 5% கலோரிகள் உள்ளன.
இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் இந்த டயட்டை ஆரம்பிப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கீட்டோ ஃப்ளூ என்றால் என்ன?
கீட்டோ உணவுத் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கியதும் மாவுச்சத்து இல்லாததால் உடலில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விடும்.
இதனால் உடல் இயக்கத்துக்கான ஆற்றல் இல்லாமல் மிகவும் சோர்வடைய நேரிடும். அதை கீட்டோ ஃப்ளூ என்போம்.
ஆகவே, கீட்டோ உணவுத் திட்டத்தைப் பின்தொடர்பவர்கள் முதல் நான்கைந்து நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்துவோம்.
கீட்டோசிஸ் என்றால் என்ன?
கீட்டோ ஃப்ளூவைக் கடந்த பின், மாவுச்சத்துக்கு மாற்றாகக் கொழுப்பு மற்றும் புரதத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு உடல் தயாராகி விடும்.
இதை கீட்டோசிஸ் என்போம். அந்நிலைக்கு வந்த பிறகு தான் இந்த உணவுத் திட்டத்தைச் சரிவரப் பின்பற்ற முடியும்.
கீட்டோ ப்ளூவால் பாதிப்பு
இதனால் உங்களுக்கு தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.
ஏனெனில் உடலானது கார்ப்ஸிலிருந்து ஆற்றலை பெறாமல் மூலதனமாக கொழுப்பை புதியதாக எடுக்கிறது. இந்த மாற்றத்தை உடம்பு ஏற்றுக் கொள்ளும் வரை சிக்கல் உண்டாகும்.
ஆரம்ப எடை இழப்பு
கார்ப்ஸ் கொழுப்பு மற்றும் புரதத்தை விட தண்ணீரை நிறைய வைத்திருக்கிறது. எனவே கீட்டோ உணவில் கார்ப்ஸை குறைக்கும் போது ஆரம்ப நிலையில் உடம்பு மெலிதானதாக தோன்றும்.
நீங்கள் கார்ப்ஸ் சாப்பிடுவதை நிறுத்தும் போது, அனைத்து கூடுதல் நீரும் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.
எனவே தான் கீட்டோ டயட் இருக்கும் போது ஆரம்பத்தில் மெலிந்த மாதிரி தோன்றும்.
எனவே இதுவே இந்த டயட்டை எப்போதாவது பின்பற்றுவதை நிறுத்தினால் மீண்டும் எடை போட ஆரம்பித்து விடுவீர்கள்.
சரும பிரச்சினை
ஆனால் கார்ப்ஸ் உணவு குறைவாக எடுக்கும் கீட்டோ டயட்டில் உங்க முகப்பரு மற்றும் பருக்கள் குறையத் தொடங்கும்.
குழப்பமான மனநிலை
சர்க்கரை தானியங்கள், வெள்ளை பாஸ்தா, ரொட்டி அல்லது இனிப்பு பானங்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது.
இதுவே கீட்டோ டயட்டில் கார்ப்ஸ் உணவுகளை குறைவாக எடுக்கும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல்,
தெளிவாக முடிவு எடுக்க முடியாமல் தவித்தல் மற்றும் உடலின் ஆற்றலை பாதிப்பது போன்றவற்றை உண்டாக்குகிறது.
மலச்சிக்கல்
உயர் நார்ச்சத்து உணவுகளுக்கு பை-பை சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம். இதனால் உடலில் நீர்ச்சத்தும் குறைகிறது. எனவே மலச்சிக்கல் ஏற்பட ஆரம்பிக்கும். மலம் கழிப்பது சிரமமாகும்.
எனவே கீட்டோ டயட் இருக்கும் போது மலச்சிக்கலைக் குறைக்க நட்ஸ் வகைகள், வெண்ணெய் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை உங்கள் கீட்டோ நட்பு உணவாக சேர்க்கலாம்.
தாகம் எடுக்கும்
கீட்டோ டயட்டில் இருக்கும் போது உடல் நீர் இழப்பு ஏற்படுகிறது. எனவே போதுமான நீர்ச்சத்தை எடுக்க தாகம் அடிக்கடி ஏற்படும்.
உங்க சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்க நீங்கள் நிறைய தண்ணீர் எடுக்க வேண்டும்.
பசியின்மையை
குறைந்த கார்ப் உணவு கிரெலின் போன்ற பசி ஹார்மோன்களின் உற்பத்தியை அடக்குகிறது. இதனால் உங்களுக்கு பசி எடுக்காது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
முடிவு
எனவே கீட்டோ டயட்டில் சில நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் உள்ளன. உங்களுக்கு எது ஏற்றது என்பதை உணர்ந்து அந்த டயட்டை பின்பற்றுங்கள். ஆரோக்கியமாக வாழலாம்.