பாதாம் எண்ணெய் ஹேர் பேக் செய்வது எப்படி?





பாதாம் எண்ணெய் ஹேர் பேக் செய்வது எப்படி?

0

பொலிவிழந்த, வறண்ட கூந்தல் உங்களை வருத்தமடைய செய்கிறதா? மாறுபட்ட பருவ நிலையால் அடிக்கடி கூந்தலின் தன்மையும் பாதிக்கிறதா? 

பாதாம் எண்ணெய் ஹேர் பேக்

இப்படிப்பட்ட சூழலில் கூந்தலை எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லையா? 

போதுமான ஊட்டச்சத்து இல்லாமையும், ஈரப்பதமின்மையும் தான் வலுவிழந்த, சிக்கலான கூந்தலுக்கு முக்கிய காரணம். 

எவ்வளவு தான் கூந்தல் பராமரிப்பிற்காக ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும், நிறைய நீர் குடித்தாலும் மட்டும் போதாது. 

போதுமான அளவு எண்ணெய் தேய்ப்பது, ஹேர் பேக் போடுவது போன்றவற்றை முறையாக பின்பற்றினால் தான் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

இவற்றை முறையாக செய்து வந்தாலே போதும் அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லி விடலாம். வாருங்கள் அவற்றைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்

தேவையான பொருட்கள்:

பாதாம் எண்ணெய் - 1/4 கப்

முட்டை - 1

செய்முறை :

1/4 கப் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு முட்டை எடுத்து ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

பாதாம் எண்ணெய் ஹேர் பேக் செய்வது எப்படி?

அந்த கலவையை ஸ்கால்ப் முதல் முடி நுனி வரை நன்கு தடவவும். 40 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து பிறகு ஷாம்பூ போட்டு குளித்திடவும்.

பூனை பற்றிய சில சுவாரசியங்களை தெரிந்து கொள்ள ! 

நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூ சல்பேட் இல்லாததாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பாதாம் எண்ணெயானது கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தரக்கூடியது. மேலும், முட்டையில் உள்ள புரதச்சத்து முடி உதிர்வை தடுத்து, மிருதுவான கூந்தலாக மாற்றிடும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)