குர்கா சந்தேஷ் என்பது புகழ்பெற்ற பெங்காலி இனிப்பு வகை. வங்காளத்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு ஸ்வீட் இது. ஆனால் இது ஸ்வீட் வகையாக மட்டும் வரையறுக்கப் படவில்லை.
கொழுப்பு சத்தால் அவதிப்படுபவரா? இந்த எண்ணெயை பயன்படுத்தவும் !
சந்தேஷில் பல வகை ஸ்வீட் ரெசிபிகள் இருக்கின்றன. இது காட்டேஜ் சீஸில் தயாரிக்கப்படும் ஒரு அபாரமான சுவை கொண்ட ஸ்வீட் ஆகும். இந்த ஹெல்தியான மிதமான இனிப்பு வகையை நாங்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
குர்கா சந்தேஷ் எப்படி செய்வதென்று மேற்கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் வாங்க!
தேவையான பொருட்கள்
1 லிட்டர் தடிமனான பால்
பிரதான உணவு
3/4 கப் வெல்லம்
தேவையான அளவு பிஸ்தா
தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய்
தேவையான அளவு வினிகர்
தேவையான அளவு நீர்
செய்முறை :
ஒரு பானில் 1 லிட்டர் திக்கான பாலை சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். பால் கொதிக்க ஆரம்பித்ததும் கேஸ் ஸ்டவ்வை அணைத்து விட்டு தண்ணீரில் கலந்த வினிகரை அதில் சேர்த்து பாலை திரிய விடுங்கள்.
முத்தமா அசுத்தமா? பேசும் அன்பு மொழி முத்தம் !
பால் திரிந்து கெட்டியானதும் ஒரு கிண்ணத்தில் மஸ்லின் துணியைப் பயன்படுத்தி பாலை வடிகட்டிக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு பனீர் கிடைத்து விட்டது.
இந்த பனீரில் வினிகரின் வாசனை போகும் வரை இரண்டு முறை தண்ணீரில் நன்றாக அலசுங்கள். பனீரை நன்கு அழுத்தி அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுங்கள்.
இப்போது துணியிலிருந்து பனீரை எடுத்து ஒரு தட்டில் வைத்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
இப்போது பனீரில் ஏலக்காய் பொடியையும் ஆர்கானிக் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக பிசைகிறீர்களோ அவ்வளவு மென்மையான சந்தேஷ் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த பனீர் கலவையை மிக்ஸியில் போட்டு சில நிமிடங்கள் அரைத்துக் கொள்ளுங்கள். இதனால் கலவை நன்றாக கலந்து இருக்கும்.
முந்திரியால் செய்யப்படும் காஜூ கத்லி ஸ்வீட் செய்வது எப்படி?
இப்போது பன்னீர் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பேப்பர் கப்புகளில் வையுங்கள். துருவிய பிஸ்தா பருப்புகளால் அலங்கரித்து பரிமாறுங்கள்.
இதை பிரிட்ஜில் வைத்து குளிர்வித்து சாப்பிட்டால் அதன் சுவை இன்னும் அபாரமாக இருக்கும்.