சுவையான சைடு டிஷ் கிரீன் ரெய்தா செய்வது எப்படி?





சுவையான சைடு டிஷ் கிரீன் ரெய்தா செய்வது எப்படி?

0

கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, சி என எல்லா விட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், விட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. 

சுவையான சைடு டிஷ் கிரீன் ரெய்தா செய்வது எப்படி?

ஆரோக்கியமான கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது. ஏனெனில் கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளன. 

இது நமக்கு நல்ல கண் பார்வையை அளிக்கிறது. கொத்த மல்லியின் தினசரி நுகர்வு வயது தொடர்பான மாகுலர் சிதைவை தாமதப் படுத்தவும், வெண்படலத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. 

நூறு ரூபாயில் புற்று நோய்க்கான மருந்து !

கொத்தமல்லி இலைகளில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ, விட்டமின் ஏ சத்துக்கள் உள்ளன. இவை நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

விட்டமின் சி இரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட வைக்க உதவுகிறது. இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

கொத்தமல்லி இலைகளின் பிரகாசமான பச்சை நிறத்திற்கு அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தான் காரணமாகும். இது நொதி செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. 

இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைத்து விடும். கொத்தமல்லி தண்ணீரை தினமும் குடிப்பது உயர் இரத்த சர்க்கரை அளவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நன்மை அளிக்க பயன்படுகிறது. 

கொத்தமல்லி இலைகளை வழக்கமாக உட்கொள்வது எல். டி. எல் போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது. 

கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கும் உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகச் சிறந்தது.

வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு !

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி

கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 2

இஞ்சித் துண்டுகள் (தோல் நீக்கியது) – 2 ஸ்பூன் அளவு

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

தயிர் – 1 கப்

பெரிய நெல்லிக்காய் (விதை நீக்கியது) – 3

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள், நெல்லிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கொள்ளவும். தயிரில் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து, அதில் அரைத்த விழுதில் கலக்கவும். கிரீன் ராய்த்தா தயார்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் !

குறிப்பு: 

வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்தது. சாப்பாட்டுக்குச் சைடு டிஷ்ஷாகவும், சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிடவும் ஏற்றது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)