நீங்கள் வயிற்று வலியால் அவதிப்படுகிறீர்கள் என்று உ ங்கள் பாட்டியிடமோ அல்லது அம்மாவுக்கோ தெரிந்தால், அவர்களது வாயில் இருந்து வரும் முதல் வார்த்தையே, ஓமத்தை வாயில் போட்டு மெல்லு என்பதாகவே இருக்கும்.
இந்த ஓமம் விதைகள், ஆலிவ் கலரில் இருந்து பிரவுன் நிறத்தில் உள்ளன. ஓமம் விதைகளில், அதிகளவு வைட்டமின்களும், நியாசின், தியாமின், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட மினரல்கள் அதிகளவில் உள்ளன.
செம்பருத்தி பூ மருத்துவ பயன்கள் !
இது மட்டுமல்லாது, ஓமம் விதைகளில் கார்போ ஹைட்ரேட்ஸ், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன.
இதன் வாசனை மற்றும் உடலுக்கு நன்மை அளிக்கும் காரணங்களால், இறைச்சி உணவுகள் மற்றும் ஊறுகாய்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓமம் விதைகளில் ஆன்டி – இன்பிளமேட்டரி, ஆன்டி – ஆக்சிடண்ட், ஆன்டி – மைக்ரோபியல், ஆன்டி – ஹைபர்டென்சிவ் உள்ளிட்ட பல்வேறு பண்புகள் உள்ளன.
ஓமத்தை விட ஓமம் கலந்த தண்ணீர், நமது உடலுக்கு அதிகளவில் நன்மைகளை விளைவிக்கிறது.
குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவு முறைகள் !
தேவையான பொருட்கள்.:
மிளகு 10 கிராம்,
கண்டதிப்பிலி 10 கிராம்,சுக்கு ஒரு சிறிய துண்டு,
வெல்லம் 150 கிராம்,சித்தரத்தை, விரலி மஞ்சள் தலா ஒரு சிறிய துண்டு,
நெய் 100 மில்லி.
செய்முறை.:
வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சி, செய்து வைத்த பொடியை சேர்த்துக் கிளறி, நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, ஆறிய உடன் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு.:
வயிறு சரியில்லாத சமயத்தில் இந்த லேகியத்தில் இருந்து சிறிதளவு எடுத்து, உருண்டையாக உருட்டி அப்படியே சாப்பிடலாம்.