சமையலறை பூச்சிகளில் இருந்து நம் உடல் நலம் காக்க... !





சமையலறை பூச்சிகளில் இருந்து நம் உடல் நலம் காக்க... !

0

சமையல் அறையில் உள்ள பூச்சிகளினால் நமது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சமையல் அறையில் நமக்கு அறிந்தும் அறியாமலும் பல வித பூச்சிகள் ஒளிந்துள்ளன. 

சமையலறை பூச்சிகளில் இருந்து நம் உடல் நலம் காக்க
சில பூச்சிகள் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்காது. எனினும் சில வகையான பூச்சிகள் உணவில் உட்கார்ந்தாலோ அல்லது அதன் எச்சம் உணவில் பட்டாலோ மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி விடும். 

இந்த வகையான பூச்சிகளை சமையல் அறையில் இருந்து ஒழிக்க வழி தெரியாமல் திணறிக்கிறீர்களா? இனி இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.

எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் !

பொதுவாக சமைக்கும் இடம் மிகவும் சுத்தமாக இருத்தல் வேண்டும். கொசு, ஈ போன்ற பூச்சிகள் உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்தால் அவற்றால் நமக்கு பாதிப்புகள் தான் அதிகம். 

இதனால் வயிற்று போக்கு, வாந்தி, பேதி, மயக்கம், தலை வலி, சில சமயங்களில் மரணம் கூட நேரலாம்.

ஆகவே இந்த பூச்சிகள் மீது நாம் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. சரி இந்த பூச்சிகளை எளிய முறையில் விரட்ட உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.

வினிகர்

வினிகர்

சமையல் அறையில் ஒளிந்துள்ள பூச்சிகளை கொல்ல  2 கப் வினிகரை 1 ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளவும். 

அடுத்து இதனை 1 கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையின் எல்லா மூலைகளிலும் ஸ்ப்ரே செய்து வந்தால் பூச்சிகளை விரட்டி விடலாம்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

ஒரு மெல்லிய துணிக்குள் ஆரஞ்சு தோலை வைத்து அதை சமையல் அறையில் கட்டி தொங்க விடுங்கள். இவ்வாறு செய்தால் பூச்சிகளினால் ஏற்படும் தொல்லையை எளிமையாக நீங்கும்.

உப்பு மற்றும் மிளகு

உப்பு மற்றும் மிளகு

உங்கள் சமையல் அறையில் அதிக அளவில் கொசு, ஈ போன்றவை இருந்தால் உப்பு மற்றும் மிளகு போன்ற பொருள்களை கொண்டு எளிமையாக சரி செய்து விடலாம். 

இதற்கு 2 கப் கொதிக்க வைத்த நீரில் உப்பு மற்றும் மிளகு பொடியை சேர்த்து கொள்ளவும். பின்பு இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்பிரே செய்து விட்டால் அவற்றை அழித்து விடலாம்.

மஞ்சள் மற்றும் உப்பு 

மஞ்சள் மற்றும் உப்பு

சமையல் அறையின் மூலை முடுக்கு போன்ற பகுதிகளில் மஞ்சள் மற்றும் உப்பை கலந்து சிறிதளவு தூவி விடுங்கள். இதில் இருக்கும் கிருமி நாசினி தன்மை இந்த பூச்சிகள் வருவதை தடுத்து விடும். 

மேலும், உணவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடங்களில் கூட சிறிதளவு இந்த கலவையை தூவி விடுங்கள், செலவே இல்லாமல் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

சுக்கு பொடி

சுக்கு பொடி

உடல் நலத்தை பாதுகாக்கும் முக்கியமான பொருளில் ஒன்று சுக்கு. இது வீட்டை பராமரிக்கவும் உதவுகிறது. 

இதற்கு 1 ஸ்பூன் சுக்கு பொடியை வெந்நீரில் கலந்து அதை பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்தால் மிக எளிதாக அவற்றை கொன்று விடலாம்.

லவங்கம்

லவங்கம்

ஆப்பிளை அரிந்து அதன் பாதி பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு இதில் இலவங்கத்தை சொருகி பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்து வந்தால் பூச்சிகள் அழிந்து விடும்.

எலுமிச்சை புல்

எலுமிச்சை புல்

ஒரு சிறிய பாத்திரத்தில் எலுமிச்சை புல் எண்ணெய்யை ஊற்றி சமையல் அறையில் ஒரு ஓரமாக வைத்து விடவும். இதே போல ஓரிரு இடங்களில் வைத்தால் பூச்சிகள், கொசு, ஈ போன்றவை சாகும்.

துளசி

துளசி

வீட்டின் முற்றத்தில் இருந்து எப்படி நமது முழு வீடையும் துளசி பாதுகாக்கிறதோ அதே போன்று நமது சமையல் அறையில் வைத்தால் நமது ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதுகாக்கும். 

சமையல் அறையில் ஒரு துளசி செடியை சிறிய தொட்டியில் வளர்த்தால் பூச்சிகளினால் ஏற்பட கூடிய பாதிப்புகள் குறையும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)