உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க? எப்போது என்ன சாப்பிடலாம்?





உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க? எப்போது என்ன சாப்பிடலாம்?

0

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். 

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க?
உடல் எடையைக் குறைக்க பேலியோ, வீகன், மெடிட்டரேனியன் என எத்தனையோ டயட் முறைகள். ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்த்தாலும், 

வெயிட் லாஸ் என்பது தூர நின்று நம்மைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பது தான் ரிசல்ட். இதற்கு முக்கியக் காரணம், பலருக்கும் சாப்பிடும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாதது. 

பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?

எப்பாடுபட்டாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜிம்முக்குச் சென்றாலும், இரண்டு மாதங்களில் உடல்வலி காரணமாக பலர் அந்த முயற்சியைக் கை விட்டிருப்பார்கள்.

ஆனால் உடற்பயிற்சிகள் இன்றியும் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இதிலிருந்தே நம் உடல் எடை என்பது, 

உணவை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆதலால் நீங்களும் உடற்பயிற்சிகளின்றி உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைத்தால் இந்த பதிவை முழுமையா படிங்க...

வெது வெதுப்பான நீர் 

வெது வெதுப்பான நீர்

மிதமான சூடுள்ள நீரில், அரை டீஸ்பூன் தேன், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் காலை வெறும் வயிற்றில் பருகிவர, உடல் எடை குறையும்.. 

அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள். வெது வெதுப்பான நீரையும் அருந்தலாம். காஃபி அல்லது டீ போன்ற காலை தேநீர் எதையும் அருந்தக் கூடாது. 

உடல் வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த சைவ உணவுகள் !

அவற்றை காலையில் மட்டும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆனால் மற்ற வேலைகளில் அருந்தலாம். 

காலை உணவு

இரவு உணவு

காலை உணவை அரசனைப் போல் உண்ண வேண்டும் என்பார்கள். நீங்கள் அப்படியே உண்ணுங்கள். ஆனால் அதில் புரோட்டீன் சத்துகள் நிறைந்திருக்க வேண்டும். 

ஆனால் கார்போ ஹைட்ரேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அது கொழுப்பாக உடலில் தங்கி உடல் எடையைக் கூட்டி விடும். அதனால் ஓட்ஸ் மற்றும் முட்டை, பழங்கள் உண்ணலாம். 

உப்புமா, சிறு பருப்பு தோசை ,எண்ணெய் சேர்க்காத ரொட்டி, ஆம்லெட், பனீர் போன்றவற்றைத் தொட்டுக் கொள்ளலாம். 

தூக்கம்

தூக்கம்

பகலில் தூங்கினால் ஊளைச்சதை ஏற்படும். இரவில் மட்டுமே தூங்க வேண்டும். இதனால் உடல் வளர்சிதை மாற்றம் சரியாக இயங்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

எண்ணெய் உணவு

எண்ணெய் உணவு

எண்ணெய் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துடுங்கள். மதியம் நிச்சயம் உங்களுக்கு அளவுகடந்த பசி எடுக்கலாம். அதை ஈடு செய்யும் வகையில் பவுல் நிறைய காய்கறிகள் அல்லது பழங்களின் சாலட் சாப்பிடலாம். 

உணவில் உப்பு அதிகம் ஆகி விட்டால் என்ன செய்வது ! 

அதோடு முட்டை, வேக வைத்த சிக்கன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சமையல் எண்ணெய் தவிர்த்து ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். 

கார்போ ஹைட்ரேட் குறைந்த சிவப்பு அரிசியை உட்கொள்ளலாம். அதற்கு ப்ரோட்டீன் நிறைந்த குழம்பு சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை ரொட்டி மற்றும் எண்ணெய் சேர்க்காத பருப்புக் குழம்பு போன்றவையும் உண்ணலாம். 

டீ , காபி

டீ , காபி

நிச்சயம் மாலையில் ஒரு கப் காஃபி அல்லது டீ அருந்தினால் தான் ரெஃப்ராஷாக இருக்கும். நீங்கள் தாராளமாக டீ , காஃபி அருந்தலாம். 

இருப்பினும் எண்ணெயில் வறுத்த சமோசா, பஜ்ஜி என உண்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் ஆப்பில், நட்ஸ் வகைகள், வேக வைத்த கடலைகள் போன்றவற்றை உண்ணுங்கள். 

இரவு உணவு

இரவு உணவு

இரவு உணவிற்கு என தனியாக சமைக்க வேண்டாம். மதியம் என்ன உணவு எடுத்துக் கொண்டீர்களோ அதையே இரவும் உண்ணுங்கள்.

ஒரு கிளாஸ் பால்

ஒரு கிளாஸ் பால்

தூங்கும் முன் பசி எடுப்பது போல் இருந்தால் சூடாக ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். 

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

இந்த டயட்டை தினமும் பின்பற்றினால் போதும் உங்கள் கண்களை நீங்களே நம்ப முடியாத அளவிற்கு உடல் எடையில் நிச்சயம் மாற்றம் கிடைக்கும். 

எனிமா சிகிச்சை

எனிமா சிகிச்சை

ஆயுர்வேத மருத்துவ முறையில் பலவகை எனிமாக்கள் உள்ளன. யார் யாருக்கு எந்தெந்த வகை எனிமா கொடுக்க வேண்டும் என மருத்துவர் முடிவுசெய்வார். 

மருத்துவரின் பரிந்துரையின் படிதான் குறிப்பிட்ட இடைவெளியில் எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், மலக்குடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் சுத்தமாக வெளியேற்றப்படும்.

புஜங்காசனம்

புஜங்காசனம்

குப்புறப் படுத்துக் கொண்டு இரு கால்களையும் அகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இரு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றி, கீழ்நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இடுப்புப் பகுதி வரை மேல் நோக்கி முடிந்த வரை உடலை வளைக்க வேண்டும். இதே நிலையில் குறைந்தது 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

இந்த ஆசனத்தைச் செய்யும்போது அடிவயிற்றுத் தசைகள் மேல் நோக்கி இழுக்கப்படுகின்றன. இந்த ஆசனத்தை தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால், அடிவயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)