வறுத்த பூண்டை சாப்பிடுவதால் உள்ள நன்மைகள் என்ன? தெரியுமா?





வறுத்த பூண்டை சாப்பிடுவதால் உள்ள நன்மைகள் என்ன? தெரியுமா?

0

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், 

வறுத்த பூண்டை சாப்பிடுவதால் உள்ள நன்மைகள்
அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு,  பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.

தினமும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொண்டால் எண்ணற்ற நோய்கள் நம்மை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

தினமும் 2 பூண்டினை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளை தரும். ஆனால் நிறைய பேருக்கு பூண்டினை பச்சையாக சாப்பிடுவது பிடிக்காது. அவர்களுக்கு தான் இந்த பதிவு.

பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணி நேரத்தில் உடலினுள்  அற்புதங்கள் ஏற்படும்.

பூண்டினை வறுத்து சாப்பிடுவது :

பூண்டில் உள்ள நன்மைகள் என்ன?
இரண்டு வழிகளில் பூண்டினை வறுத்து சாப்பிடலாம். பூண்டு பற்களின் தோலை உரித்து சுத்தம் செய்து பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து மணம் வரும் வரையும் வறுத்தும் சாப்பிடலாம்.

பூண்டு பற்களின் தோலினை உரிக்காமல் வெறும் பாத்திரத்தில் சேர்த்து தீயில் வைத்து மணம் வரும் வரை வறுத்தும் சாப்பிடலாம்.

வறுத்த பூண்டின் முத்தான பயன்கள் 

வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது.

உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கி இருக்கும்  கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

உடலில் உள்ள தமனிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது.

பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.

எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும். உடலில் உள்ள  செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.

வறுத்த பூண்டை சாப்பிடுவதால் உள்ள நன்மைகள் என்ன?

இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்கும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.

உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்து உடலின் சோர்வை நீக்குகிறது. சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைத்து உடல் எடையினை சரியான அளவில் வைத்துக் கொள்கிறது. உடலில் ஏற்படும் அலர்ஜிகளையும், பூஞ்சை தொற்றுகளையும் எதிர்த்து போராடும் குணம் பூண்டில் உண்டு. 

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உதவுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)