அன்றாட உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாக்கினால் உணரப்படும் உப்பின் சுவை, மற்ற சுவைகளை விட நமக்கு சந்தோஷத்தை தரும்.
பெண்களிடமும் பரவும் மதுப் பழக்கம் !
எனவே குறைந்த அளவில் உப்பு இருந்த போதிலும், சுவையாக உணர முடியும். அன்றாட உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
நாக்கினால் உணரப்படும் உப்பின் சுவை, மற்ற சுவைகளை விட நமக்கு சந்தோஷத்தை தரும். உணவின் ருசியை உப்பு அதிமாக்குகிறது.
குறைந்த அளவே உப்பை சாப்பிட்டு பழகினால் நாவில் உள்ள நுண் நரம்புகள் அதற்கேற்றார் போல் மாறிக் கொள்கின்றன. எனவே குறைந்த அளவில் உப்பு இருந்த போதிலும், சுவையாக உணர முடியும்.
அப்படி உணவில் உப்பு சரியாக இல்லாமல் கூடுதல் ஆகிவிட்டால் அவ்வளவு தான். இதை எப்படி எளிமையாக சமாளிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உணவில் உப்பு அதிகம் ஆகி விட்டால்...
குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவை பாலில் கலந்து குழம்பில் சேர்த்தால் உப்பின் அளவை சரி செய்யலாம். ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால்.
ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ரசத்தைக் கொதிக்க விட்டு மிளகு, சீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து ரசத்தை இறக்கினால் உப்பின் அளவு சரியாகி விடும்.
நீங்க முட்டை சாப்பிடுறீங்களா? அப்போ இதை கண்டிப்பா படிங்க
கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற பொரியல்களில் உப்பு அதிகமானால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்க்கலாம்.
பட்டர் பனீர், பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் ப்ரெஷ் கிரீம், சூடான பால் அல்லது வெண்ணெய் சேர்த்தால் காரம் குறைந்து சுவையாக இருக்கும்.
பொடி வகைகளில் உப்பு அதிகமாகி விட்டால், அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணலியில் வறுத்து, தனியாகப் பொடி செய்து அதில் கலந்து விடவும்.
பிரியாணி காரமாக இருந்தால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிக் பிரியாணியில் கலந்தால் காரம் குறைந்து விடும்.
தோசை மாவில் உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து சேர்த்து விட்டால் உப்பு சரியாகி விடும்.
முடிவு....
நமக்கு தேவையான சோடியத்தின் அளவு ஒரு நாளுக்கு 2.3 கிராம். இது ஒரு தேக்கரண்டி அளவாகும். இந்த அளவிற்கு மேல் உப்பு எடுக்கும் போது பாதிப்பு ஏற்படும்.
எந்த நோய்க்கு எந்த ரத்த பரிசோதனை !
பதப்படுத்திய, வேக வைத்த உணவுகள், சூப், ஊறுகாய்கள், கருவாடு, மாமிச உணவு, அப்பளம், வடகம், சோடா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உப்புசத்து அதிகமிருக்கும்.
பல வீடுகளில் சாதம் சமைக்கும் போதே உப்பு சேர்க்கின்றனர். அது தவறு. சாம்பாரில் பாதியளவு உப்பு போட்டால் போதும்.
சூரியக் குளியல் உள்ள சிறப்புகள் !
இவற்றை வாங்கும்போது உப்பு அளவை பார்த்து வாங்க வேண்டும். சுத்திகரித்த குடிநீரில் கால்சியத்தை எடுத்து விட்டு, சோடியம் கலக்கின்றனர்.
இதனால் தண்ணீர் குடிக்கும் போது நமது உடலில் மறைமுகமாக உப்பு சேர்கிறது.