குக்கரில் உணவு சமைக்கப்படுவது எப்படி? அதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன?





குக்கரில் உணவு சமைக்கப்படுவது எப்படி? அதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன?

0

நீரின் கொதி நிலை பொதுவாக 100 டிகிரி செல்சியஸ். ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்கப்படும் போது நீரின் வெப்பநிலை 100 அடைந்த பிறகு நீர் ஆவியாக மாறும். 

நீரின் கொதி நிலை பொதுவாக 100 டிகிரி செல்சியஸ்
எவ்வளவு அதிகமாக வெப்பம் கொடுத்தாலும் நீரின் வெப்பம் 100 ஐ தாண்டாது. அதிகமாக கொடுக்கும் வெப்பம், நீரை ஆவியாக்கிக் கொண்டே இருக்கும். 

நீரின் கொதிநிலை அதன் மேற்பரப்பில் உள்ள காற்றின் அழுத்தத்திற்கு ஏற்ப மாறுபடும். காற்றின் அழுத்தம் அதிகமாக இருக்கும் போது கொதி நிலை 100 க்கு மேல் இருக்கும்.

குக்கரில் இந்த காற்றின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் நீரின் கொதிநிலை 120 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதனால் உணவுகள் முக்கியமாக பருப்பு வகைகள் குறைந்த நேரத்தில் வெந்து விடும்.

நீரின் கொதிநிலை 120 டிகிரி செல்சியஸ்

ஊட்டி போன்ற உயரமான மலைப் பகுதியில் காற்றின் அழுத்தம் குறைந்து இருக்கும். அங்கே நீரின் கொதி நிலை 100 க்கும் குறைவாகவே இருக்கும். அதனால் சமைக்க அதிக நேரம் எடுக்கும்.

குக்கரில் உள்ள வெய்ட் தான் உள்ளே உள்ள காற்றின் (ஆவியின்) அழுத்தத்தை நிச்சயிக்கிறது. 

நிச்சயித்ததை விட காற்றின் அழுத்தம் அதிகமாகும் போது வெய்ட் தூக்கப்பட்டு அதன் வழியாக நிராவி வெளியேறி விடும்.

குக்கரில் உள்ள காற்றின் அழுத்தம் அதிகப்படுத்துவதால் நீரின் கொதிநிலை அதிகமாகி உணவுகள் குறைந்த நேரத்தில் சமைக்கப்படும்.

குக்கர் சாதம்

குக்கர் சாதம்

குக்கரில் சாதம் செய்வது மிகவும் எளிது. ஊர வைத்த அல்ல கழுவி வைத்த அரிசியை அளவான நீரில் குக்கரில் வைத்து சமைத்தால் போதும். 

இது மிகவும் எளிது. குக்கரில் சாதம் வைத்தால் அனைத்து சத்துக்களும் வீணாகாது. 

நம் முன்னோடிகள், சாதம் சட்டியில் அல்லது மண் பாத்திரத்தில் சமைத்து அதன் பின் மிஞ்சிய நீரை வடித்தனர். இவ்வாறாக செய்யும் போது, வடித்த நீரில் சத்துக்கள் வீணாகக்கூடும் 

அதனால் தான் முன்னோர்கள் அந்த தண்ணீரை சேமித்து வைத்து தனியாக குடிப்பார்கள் அல்லது சோற்றுநீர் என்று எடுத்து வைத்து கூழ், களியுடன் உண்பார்கள். 

இதனால் தான் நம் முன்னோர்கள் உணவில் உள்ள எந்த சத்தும் வீணாகாது உபயோகம் செய்தனர். அதற்று ஏற்றார் போல, உடல் வியர்க்க உழைத்தனர். 

நோய்களும் சற்று குறைந்தே இருந்தது, அன்று. ஆனால், இன்று உடல் வியர்க்க உழைப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.

குக்கர் சாதம் நன்மைகள் என்ன?

குக்கர் சாதம் நன்மைகள் என்ன?

ஏனெனில், இன்று நாம் பயன்படுத்தும் குக்கர் சாதத்தில் அனைத்து சத்துகளும் அப்படியே இருக்கும். ஆகையால், உடம்பு தேவைப்படும் சத்துகளை விட மிகவும் அதிகமாகவே நமக்கு கிடைக்கிறது. 

சத்துக்கள் என்பது முக்கியமாக பளபளப்பு கொண்ட அரிசியில் புரதம், கஞ்சி பசை, உயிர் சத்து செறிவுட்டபட்ட அரசி போன்றவை உள்ளன. 

இந்த குக்கரில் சமைத்த உணவு உடல் எடை குறைவு, சத்து குறைவு உள்ள குழந்தைகளுக்கு நல்லது.

குக்கர் சாதம் தீமைகள் என்ன?

குக்கர் சாதம் தீமைகள் என்ன?

எந்த நல்லவற்றிலும் சில கெட்டவை இருக்கக்கூடும். ஆகையால், தான் நாம் உண்ணுகின்ற உணவு அதிகப்படியாய் உள்ளது. 

அதற்கு ஈடாக, பெரும்பாலும் உடல் உழைப்பு தருவது இல்லை. அதனால், நோய்களும் இக்காலத்தில் அதிகரித்திருக்கிறது. 

அதனால், தான் இன்றைக்கு உடல் பருமன், கொழுப்பு அளவு உயர்வு, நீரிழவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உபாதைகள் அதிகரித்திருக்கிறது என்றும் கூறலாம். 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ஆதலால் தான், சாப்பிட்ட உணவு அளவுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்வது நல்லது 

அல்லது இவற்றை போன்ற அரிசி சார்ந்த உணவு வகையை குறைத்து வேறு உணவான காய்கறிகள், பழங்கள், தினை பயிறுகள் அதிகமாக சேர்த்து கொள்வது மிக நல்லது. 

இதனை கடைபிடிப்பதால், முடிந்த வரை நோய்களும் நம்மை அண்டாமல் கட்டுப்படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)